top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

KAVIGNAR BHARATHI BASKI - India

Entry No: 

478

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

*🙏🏻#நம்மை #காக்கும் #சாமி🌾*
*#இராணுவ #வீரர்கள்✍*

நாட்டு எல்லையிலே நீ ஒய்யாரமாய் ஊர்காக்கும் அய்யனார்போல் எங்களை காப்பாற்ற காத்துகிடக்கிறாய்...

கொட்டும் மழையிலும்
பொழியும் பனியிலும்
அனல்பறக்கும் வெயிலிலும்
இரவு பகல் விழித்திருந்து
தொல்லைகள் பல பொறுத்திருக்கிறாய்...

உணவு உறக்கம் உறவு
எல்லாம் மறந்தாயே,,,
கடமையை மட்டும் மறவா வீரச்செம்மலே!
நின் பாதங்களை மலர்தூவி தொட்டு வணங்குகிறோம்...

இந்திய மண்ணின் மானம் காத்து
எல்லையிலே வாழ்வை கழித்து
இயந்திரத்தோடு இயந்திரமாய்
எந்நேரமும் இயங்குகிறாய்...

குமரி முதல் இமயம்வரை,
கன்னி வெடிகளும் உன் காலில் படலாம்
துப்பாக்கி குண்டுகளும் நின்னுடலை துளைக்கலாம்,,,

எந்த நேரத்திலும்
எதுவும் நடக்கும் கலங்கிவிடாதே,,,
மனம் நொறுங்கி விடாதே..!
சுயநலம் கொண்ட மனித பூமியில் நீங்கள்தான் பொதுநல தியாகிகள்..!

இளைஞர்கள் அனைவரும்
ராணுவம் போவோம்!
இந்திய எல்லை நாமும் காப்போம்!!
நமக்கு கிடைத்த வாய்ப்பு அதை
நாமும் கைப்பற்றி பாரதம் காப்போம்...!!!
ஜெய்ஹிந்த்🙏🏼🙏🏼🙏🏼

கவிஞர் பாரதி பாஸ்கி
(சமூக ஆர்வலர்)
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

bottom of page