REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KAVIARASAN SHANMUGARAJ - India
Entry No:
199
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தலைப்பு : காதல்
அவள் ஒரு ஹைக்கூ பூ
முகம் என்னும் மேடையில் இமைகளின் இசைக்கேற்ப நடனமாடும் இரு நிலாக்கள்
அவளின் விழிகள் ! ! !
மரத்தின் பூக்களை
ரசித்துக் கொண்டே
இமைத்து விடாதே கண்மனி
மீறினால் நீ இமைத்த
அழகைக் கண்டு
தன் பூக்களை எல்லாம்
உன் மீது உதிர்த்து
விடப்போகிறது பரிசாக !!!
ஒரு நொடிப் பொழுதில்
ஒரு நூறு பேரை கட்டியிழுக்க
ஒரு முறை வீசும் அழகான
ஆழியலை உன் கண்கள
இருமுறை வீசி விடாதே
புயல் என்பர்
மும்முறை வீசி விடாதே
சுனாமி என்பர் !!!
தேன் எடுக்க ஊரெங்கும்
அலைந்து திரிந்து இறுதியில்
உன் உதடுகளிடமே
வந்தடைகின்றன
பல பட்டாம் பூச்சிகள் !!!
மாலைப் பொழுதில்
அவளின் கன்னம்
தொட்டு உரசவே
கட்டிய முடியிலிருந்து
தப்பும் சில முடிகள் !!!
அழகைப் பேரழகாக்க
அவள் இடும் ஒரு புள்ளிக்
கோலம் மூக்குத்தி !!!
கண்ணங்களை எப்படியாவது தொட்டுவிடலாம் என்று ஓயாமல்
ஆடிக் கொண்டிருக்கின்றன
அவளின் ஜிமிக்கி கம்மல்கள் !!!
அவளின் பாதங்களை
முத்தமிட வரிசையில்
வந்து வந்து போகின்றன
பெருங்கடலின் பேரலைகள் !!!
என் கவிதைகளெல்லாம்
ஒன்று கூடி அவளுக்கு
மகுடவிழா நடத்துகின்றன
அவள் கவிதைகளின்
இளவரசி என்பதால் ! ! !
அவள் ஒரு ஹைக்கூ பூ !!!