top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

KARTINI NADARAJAN - Malaysia

Entry No: 

339

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

வணக்கம்.
தாய்மண்ணின் நல்வாழ்வுக்காய் நாட்டு எல்லையில் நின்று பணிபுரிந்து தம்மையே அர்ப்பணித்து வீரக்காவியமான அனைத்து இராணுவ மாவீரர்களையும் நெஞ்சத்தில் நிறுத்தி,
இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.


தலைப்பு : அன்பின் உன்னதம் - ஓர் இராணுவனின் வாழ்க்கையில்....


நாழியும் உறங்கா ஆழியைப் போலாவாய்
நாட்டுக்கும் நமக்கும் கண்ணியமாய் பணிபுரிவாய்
ஊழியில் இவன்போல் ஓரினத் தலைவனாய்
வீறுகொண்டு எழவே தாயகத்தின் தலைமகனாகவே!

தடைகளை உடைத்தே விதிவழி நடந்தாய்
சதிகளை முறித்தே புதுச்சரித்திரத்தைப் படைத்தாய்
வஞ்சகனைக் கொன்றொழித்து உரிமைகளை வென்றெடுத்தாய்
மேன்மக்களின் வளம்சிறக்க மனங்கிடந்து துடித்திருப்பாய்!

காய்கதிரின் வெயிலிலும் கடுமழையின் பெயலிலும்
ஓய்ந்திடாது பணிபுரியும்நீ கடமைக்கோர் கதிரவன்
தாய்க்கு அரணாக மகனவன் இருக்கையில்
தாய்நாட்டைக் காக்கும்நீ எங்கள் ஆன்தாயாவாய்!

உன்னுயிரே உலகத்தின் அரியவரமே யதைஅறிந்தும்
உவகையோடு பிறந்தமண்ணுக்குத் தியாகித்த மாவீரனே
எம்விழிகள் துயிலுர உம்விழித்திறந்து நின்றுகாத்தாய்
எம்முயிர் காக்க உம்முயிர்தந்த கொடைவள்ளலே!

வனங்களே வீடானது களங்களே வாழ்க்கையானது
வீட்டோர் நலனெண்ணி நினைவதிலே சுகம்கண்டாய்
எல்லையில் நாட்டைக்காக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டாய்
எங்கள் நல்வாழ்வுக்காய்நீ வலிகளைச் சகித்தாய்!

கரிதமறியா பொதுநல நெஞ்சங்களாய் சேவையாற்றி
உறவுகளைப் பிரிந்து பாசத்தைத் துறந்து
குறுதியோடு கலந்தோடும் நாட்டுப் பற்றினால்
பகலிரவாய் உழைத்துத் தாய்மண்ணிற்கே விதையாகினாய்!

செந்நீர்சிந்தி வென்றதால் செம்மையானது செங்குடி
சளைத்து நோகாமலும் களைத்து வீழாமலும்
சமர்களை வென்றுநீ சுதந்திரத்தைச் சுவாசித்தாய்
சங்காரம் நேர்ந்திடினும் சாகாது வாழுமுன்சிறப்பு

உன்னத இராணுவபணிக்கே உன்னுயிரை அர்ப்பணித்தாய்
உயிர்வாழும் கணங்கள் தாய்மண்ணிற்கே உரியதாய்
மண்ணின் மைந்தனாய் இளையோரின் சரித்திரநாயகனாய்
மரணித்தும் எம்மனதில் புதைந்திடுவாய் மாவீரமனிதனாய்!

நன்றி.

bottom of page