REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
KALIYAN P - India
Entry No:
486
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
1 .அன்பு
அன்னையின் அன்பில் ஆழ்கடல் அலைபோல்
இன்பத்தைத் துய்த்து இவ்வுலகில் வாழ்ந்திட
தன்மன மேற்றிய தாயின் அகத்திலே
துன்பம் இல்லாது தூங்கி எழுந்தேன்
பந்தானப் பூமியை பார்க்க செய்தது
தந்தை அன்புதான் தன்னலம் கருதாது
முந்தைய பிந்தைய முப்பெரும் வாழ்விலே
விந்தையை நிகத்திட வியர்வை சிந்தியவர்
அக்கா தங்கை அள்ளி தூக்கியே
சொக்க வைத்த சுவையான அன்பினால்
பக்கத்தில் அமர்த்தி பருப்பு சோற்றினை
கக்கத்தில் பிடித்து களிப்புடன் ஊட்டினார்
நண்பனின் அன்பு நடக்க செய்தன
எண்ணிப் பார்த்தேன் இதயத்தில் கணக்கிட்டு
அண்ணன் போலொரு அன்பு கிடைத்ததால்
விண்ணுக்குச் சென்றிட வியப்பில் விழுந்தனர்
முல்லைப்பூ விதழாய் முகங்காட்டும் உறவுகள்
நன்பனி நீராய் நற்றமிழ் உன்னைப்போல்
சொல்லில் அன்பினை சுவைபட பேசிட
பல்வினை கோணத்தில் பரிணமிக்க செய்தது
அன்பின் சிறப்பினைப் அளக்காது ஊற்றிய
நன்மதி பெற்ற நல் வான்மழைபோல் வள்ளுவர்
தன்னில் சோதியாய் தனிப்பெரும் கருணையாய்
இன்னலை போக்கிட எடுத்தாண்ட வள்ளலார்
மண்களில் மலர்களால் மானூடம் செழித்திட
கண்கள் ஒளிபோல் காரிருள் அகத்தினை
புண்ணிய கருத்தினை புதுபித்து தந்ததால்
கண்ணியமும் அன்பும் கைகுலுக்கி நின்றன
மனைவி மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்திட
நிலையில்லா மெய்யுடலை நினைத்துப் பார்த்திட
அன்பினை எடுத்துக் அகிலத்தில் கொடுத்ததால்
நிலையான உலகத்தில் நிம்மதி ஊற்றுமே
வினைபட முடிந்தது விழிகளில் நீரின்றி
பெ.கலியன் ஆசிரியர் விழுப்புரம்
பேசி: 9750025787
2. காதல்
பூத்த மலரினை மாலைப்
பொழுதில் கண்டு
காதல் செய்வதை காற்றிடம் சொன்னேன்
மலரும் மறுத்து மன்னிப்பு கேட்டது
உதிர்வேன் நானே ஓரிரு நாட்களில்
உண்மை காதலை உதாசீனம் செய்யேன்
என ஒதுங்கி நின்றன
அன்ன நடையுடைய அழகிய வெண் புறா
விண்ணை தவிர்த்து வீட்டுக்கு அழைத்தேன்
எந்தன் இனத்தில் இருக்கும் ஒழுக்கத்தை
உந்தன் இனத்திலே ஒருவருக்கும் இல்லையே
எந்தன் காதலை எடுத்து வீசியே
பந்த கூட்டத்துடன் பாசமாய் பறந்தது
மண்ணில் பிறந்த நான் மண்ணை நேசித்தேன்
உன்னை தாங்கிட என் உயிர் உள்ளது
இருக்கும் நாள் வரை இன்னலை நீக்கியே
நின் உயிர் பிரிந்தபின் நிறைவுடன் ஏற்கிறேன்
என்று நியாயம் இயம்பின
காற்றின் மீதுகலந்த காதலால்
ஏற்று சுவாசித்தேன் இவ்வுயிர் காத்திட
தீய நாற்றம் தீங்கு செய்யும் நஞ்சும்
விட்டிடு யெனையென விடுதலையானது
முற்றிய தேகம் முடியாது போனதால்
சுற்றம் சூழ்ந்திட சுடுகாடு சென்றனர்
காதலின்றி காணு முயிர்கள்
சாதல் அடைவதே சாலச்சிறந்தது
கூடல் ஒன்றுதான் காதல் முடிவென்றால்
நல் தேடல் இருக்க தித்திக்கும் காதலும்
ஒன்றாக இணைந்த பின் ஊடலும் பாடலும்
வாடல் நீக்கிட வருந்தாது என்றும் காதல்
கவிஞர் பெ. கலியன் ஆசிரியர் விழுப்புரம்
பேசி:9750025787