top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Kalaiselvi Saravanan - India

Entry No: 

497

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்!
________
தொப்புளில்-கண்ட
சுவாசம் முதல்
தொட்டு அணைத்து தூக்கிய
அன்னையின் அன்பும்-ஓர் காதலே!....

நாம்!
செல்லும் பாதை எதுவென
பண்பட நம் பின்னே வந்த
பாதச்சுவடாய் தந்தையின் பரிவும்
ஓர் காதலே!....

நம் வாழ்வில்!
அஞ்ஞானம் நீக்கி
மெஞ்ஞான ஒளி தந்த-குருவின்
தெய்வீக வழிகாட்டலும்-ஓர் காதலே!....

இன்பமோ, துன்பமோ
இணைப்பிரியா உறவாக
இணைந்து பயணிக்கும்
நட்பென்னும்-நல் புனிதமும்-ஓர் காதலே!....

மனம் எனும்
மணபந்தலில் இருவர் ஒருவராக
இணைந்திட்ட பாலமாக-திருமண
பந்தமும்
ஓர் காதலே!....

சுவாசித்த காலம் முதல்
சுவாசிக்கும் காலம் வரை
சுகந்த தென்றலாய்-நம்
மனதை வருடும்
காதலென்றும்
இனிமையே!....

bottom of page