top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Janani Supasri. I - India

Entry No: 

359

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்...
என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டுவதில்லை மாறாக உற்சாகமாகின்றன... இன்றுவரை மனிதன் மனிதனாக வாழ உதவும் ஆக்ஸிஜன் காதல்... காலம் கட்டாயம் ஒரு மனிதனை சவமாக்கும் ஆனால் காதலால் சவமாக வாழும் சிலறை கூட சரித்திரம் ஆக்க முடியும்... ஒரு முறை உண்மையாய் ஒருவரை காதலித்து பாருங்கள் சேதம் அடையாமலே வலி பெற முடியும், இதயம் இயங்கும் போதே உயிர் பிரிவதை உணர முடியும்...
ஏது இன்பம் இவ்வுலகில் காதலை போல.... ஏது துன்பம் இவ்வுலகில் காதலை விட.... பார்வையற்றவருக்கும் தெரியும் காதலின் அழகு...

காதல் என்பதில் இருவரின் அன்பு மட்டுமின்றி , தன்னம்பிக்கை, மன தைரியம், உறுதுணை, லட்சியம், ஆசை, கனவு போன்றவையும் ஒன்றோடொன்று கலந்து சங்கமிக்கும் இடமாகும்...

காதலுக்கு உருவம் இல்லை காற்றை போல எங்கும் இருக்கும் எங்ஙேங்கும் இருக்கும்... காதல் இல்லா உலகமும் இல்லை, காதலிக்காத மனிதனும் இல்லை...
வாழும் இந்த வாழ்க்கை இன்னும் நீண்ட காலம் தொடர வேண்டும் என்று தோன்ற வைக்கும் உண்மையாய் ஒருவரை காதலிக்கும் போது....
உணர்வுகளுக்கும், உயிருக்கும் உடைமையே இந்த காதல்....
உடல்களின் ஈர்ப்பை அற்று உள்ளங்களின் ஈர்ப்பால் உருவான உண்மை காதல் தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் இவ்வுலகில்....

காதலில் தோல்வி என்பது காதலுக்கு அல்ல அந்த காதலர்களுக்கே....

மனித பிறப்பை அழகுக்கும், அற்புதமாக்கும், அர்த்தமுள்ளதாக்கும் அபூர்வ சக்தி வாய்ந்த உண்மை காதல் என்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவ்வுலகில்...♥️

bottom of page