REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
InfantNesan J - India
Entry No:
329
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
மனித இனம் அழிந்தாலும்
அழியா புகழ் பெற்ற
காதலே..!
கவிகள் பல உண்டு
உன் அழகினை பாட...
அவை யாவும் பாதியே
உன் அன்பினை உணர...
தென்றலாய் வீசுகின்றாய்
இதயங்கள் உரச. ..
மழையாய் பொலிகின்றாய்
ஈரங்கள் பாய்ச்ச...
அம்புகள் தொடுக்கின்றாய்
மனங்கள் இணைக்க...
உரங்கள் இடுகின்றாய்
காதல் வேரூன்ற...
புரியாத புதிராய்
காலங்கள் பலகடந்து...
ஆட்சி செய்யும்
காதலே..!
கதிரவனை கோல்கள் சுற்ற
காரணம் நீயே..
மறுக்க முடியா
நீதியும் இதுவே..
மதங்கள் மறைத்தாய் !
சாதிகள் வெறுத்தாய் !
என்னவென்று போற்றுவேன்..
உன்னகத்தின் தூய்மையை!
வெற்றிடத்திலும்
வெற்றிக்கொண்டு
வீற்றிருக்கும் காதலே..!
வேற்றுமை அகற்ற
சேர்த்தாய் இதயத்தை...
பிரியாது இருக்க
தந்தாய் காமத்தை ...
வண்டிற்கோ பூவின்
மீது காதல்...
கவிஞனுக்கோ கவியின்
மீது காதல்...
ஆணுக்கோ பெண்ணின்
மீது காதல்...
உறவை வெறுத்தவனுக்கோ
தனிமையின் மீது
காதல்...
ஆழ்கடல் முத்தெடுத்து
தங்க நாணல் தொடுத்து
அரியணை அலங்கரிக்கும்
காதலே..!
பவள அம்பெய்து
இதயங்கள் கோர்கின்றாய்...
அன்பென்ற சொல்லாலே
உறவுகள் தழுவுகின்றாய்...
அழகை வெறுத்து
மனதை பார்த்து
வரும் காதலே!
கவிஞர்கள் பல இருக்க
எவனுண்டு உன் புகழ்
அழித்திட ...
உலகத்தை தாண்டியும்
ஆள்பவளே
இவை யாவும் சிறியனவே
உன் புகழ் பார்க்கையிலே
- இன்பென்ட் நேசன் ஜா