REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Idhazhini Krishnan - India

Entry No: 

238

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

வேனிற்காலத்து மழைத்துளி நீ

கானல் நீராய் கிடைத்த காவிரி நீ

எட்ட முடியா வானம் நீ

தீட்ட முடியா ஓவியம் நீ

விவரிக்க முடியா அழகு நீ

விவாதிக்க முடியா கருத்து நீ

நிற்க இயலா நெடுமரம் நீ

கற்க இயலா காவியம் நீ

கண்டறியப்படாத வைரம் நீ

காணக்கிடைக்காத ஒளியும் நீ

தனித்தீவாய் நின்ற எனக்கு பெருந்துணை நீ

எதற்கும் இணை இல்லா என் உயிரும் நீ