REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
GOMATHI RAJARATHINAM - India
Entry No:
429
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவிதை - அன்பு
அன்பு உள்ள இடந்தனிலே அனைத்தும் நன்மையாய் இயங்கிட!
அன்பில்லாது போகும் இடந்தனிலே ஆதரவுக் கரம் நீட்டியே
குழந்தைகள் காப்பகமும் மனநிலை மையமும் முதியோர் இல்லமும் அன்பாய் இயங்கிட!
அன்புள்ளோரின் உள்ளமும் வெண்மை நிறமாய் மின்னிட!
அன்பு கொண்டவர்களாலே இப் புவியும் செம்மையாய் இயங்கிட!
அன்பே பிரதானமாய் அன்பே மூலதனமாய் அன்பே உயிராய் ஏற்று வாழும் பலரைப் போல
தூய அன்புடனே அனைவரும் வாழ்தல் இனிமைதானே!
வாங்கும் கடனுக்கெல்லாம் வட்டியுடனே வசூலித்து விடுவார்களே!
ஆனால் அன்பென்னும் கடனுக்கு எதை வைத்து தான் வசூலிப்பதோ?
அன்பென்னும் ஆயுதத்தால்
அகிம்சை என்னும் மலரையும்
பிரியம் என்னும் நாரையும் கொண்டு
தூய்மையான அன்பு என்னும் மாலையையும் உருவாக்கி
அன்புக்கடனுக்கு சூட்டினாலும் தகுமோ?
கழனியில் விளையும் அரி பிறர் கைக்குச் சென்று பசியாற்றியதில் உள்ளதே அன்பாம்!
கதிரவனும் முழுமதியும் தன்னலம் மட்டுமே சிந்தித்தால் நம் வாழ்வது தான் எங்கே?
பிறர் படும் இன்னல்களில் தன் தேவையை மட்டுமே நிறைவேற்றிக் கொள்வதில் எங்கு ஒளிந்ததோ அன்பு?
தான் மட்டுமே உண்டு உறங்கி
தன் சுகம் காணும் புவிதனிலே
பிறருக்கும் உவகையுடன் ஈதலே அன்பென்போம்!
அன்பென்னும் நூலெடுத்து மனிதமாகிய கதம்பத்தை வைத்துக் கட்டவோ அன்பாகிய மனிதமான பூமாலை என்றும் இன்பமே!!
அன்பு ஆழமானது!
அன்பு அமைதியானது!!
அன்பு உன்னதமானது!!!
தன் மழலையின் மகிழ்ச்சிதனை அன்பால் நிறைத்திடும் பெற்றோராலும்!
அன்பினால் கட்டுப்பட்டு கண்ணியத்துடன் நிமிர்ந்திடும் தோழமைகளும்!
அன்பே பிரதானமாய் அன்பினாலே நற் செயல்களால் நன்மையடைந்திடும் நம்மைச் சார்ந்தோர்களும்!
சின்னஞ்சிறு அன்பினிலே பெரிய உலகத்தைக் கண்டிடும் மழலைகளும்!
அன்பை மட்டுமே அள்ளி அள்ளி கொடுத்த மூத்தோர்களும்!
அனைவரின் அன்பினிலே அகிலமும் அருமையாய் இயங்கிடுமே!
பிரியமுடன்
இரா. கோமதி
பொள்ளாச்சி.
அலைபேசி எண் - 96885-62895
மின்னஞ்சல் முகவரி - gomezsamyu@gmail.com.