top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

GANESAN GUNASEKARAN - India

Entry No: 

248

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தந்தையே என் சிந்தையின் முகவரி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குன்றா புகழோடு
குவலயத்தில் வாழ்ந்தவர்
நன்றாக வாழ்ந்திடவே
நாள்தோறும் பாடுபட்டவர்

தோளுக்கு மேலே
தினமும் தூக்கி சுமந்தவர்
மற்றவர் எட்டாத உயரத்தை
பிள்ளைகளை எட்டிடச் செய்தவர்

யாதுமாகி குழந்தைகளை
வளர்த்து ஆளாக்கியவர்
வேதமெனப் பொருளாகி
வழிகாட்டி வாழ்ந்தவர்

கீதமென ஒலித்திடும்
அன்பான வார்த்தைகள்
நாதமென முழங்கிடும்
நம்பிக்கை வாசகங்கள்

தலைமுறை தழைத்திடவே
தவமிருந்து வளர்த்தவர்
அலைகடல் போலவே
ஆர்ப்பரிக்குமே தந்தையின் நினைவுகள்

தளராத உழைப்பாலே
தாயுமானவராய் பரிமளித்தவர்
மலரும் வசந்தமாய்
மனதிலே நின்றவர்

வாழ்க்கையில் சிறப்பதற்கு
ஊக்கமாக வந்தவர்
வானத்தில் பறப்பதற்கும்
நம்பிக்கைத் தந்தவர்

சவால்களை வெல்வதற்கு
முயற்சிக்கச் செய்தவர்
சாதனைகள் படைப்பதற்கு
பயிற்சிகள் கொடுத்தவர்

எளிய மனிதராய்
எல்லோரையும் கவர்ந்தவர்
வழியே கருத்துக்களை
வழங்கியே ஊக்குவித்தவர்

ஆயிரம் முகவரிகள்
அகிலத்தில் இருந்தாலும்
தந்தையின் 'முக'வரிகள் மட்டுமே
சிந்தையில் குடியிருக்கும் என்றும்.

~க.குணசேகரன்

bottom of page