REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

G. Maya Krishnan - India

Entry No: 

350

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


கவிதை
"அன்பு "


" அன்பென்னும் காற்று நீ
நித்தமும் சுவாசம் கொள்ளவா !
உன் மூச்சு காற்று
தொட்டதில் இலைகளாய்
அசைகிறேன் திசையெங்கும்
மின்காந்தமாய் ஈர்த்துக் கொண்ட காற்று ... நீ

பூக்களின் நறுமணம்
வண்ணத்துப் பூச்சி நிறம்
கனிகளின் வண்ணம்
அன்பென்னும் அறிமுகம் ... நீ

திசைகளை கண்டுபிடிக்கிறேன்
உன் பாதச்சுவடுகளில்
வீதியெங்கும் பூக்களின் தோரணம் கட்டி வைக்கிறேன்
நட்சத்திரம் கொண்டு ஒளியேந்துகிறேன்
நிலவு கொண்டு காத்திருக்கிறேன்...
அன்பென்னும் காற்று ... நீ

கடல் நிறம்
நதியின் ஓசை
மழையின் சத்தம் ...
ஆதலால்
அன்பென்னும் காற்று ... நீ "