top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Easwari Kaleeswaran - India

Entry No: 

210

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு
தொப்புள் கொடி உறவால்
தாய் அன்புக்கு அடிமை
அறிவூட்டிய ஏணியாம்
தந்தை அன்புக்கு அடிமை
ஒருதாய் கருவில் உடன்வந்த
உடன்பிறப்புக்கும் அடிமை
அன்பினால் அகக்குருடாகி
அறிவழிந்து வாழ்விழந்தோர்உளர்.
வளர்ப்பு அன்னையின்
பாசத்திற்கு பட்டம் துறந்து
வனம் புகுந்த ஒருவன்புகழ்
பவனியெலாம் பறைசாற்றும்.
உடன்பிறந்த அண்ணனின் அன்புக்காக உடன்சென்ற
இளையவனும் ஏட்டினிலே இடம்பிடித்தான்
அன்புத்தம்பியென்று
அண்ணனின் துணைவியோ
கொண்டவனுடன் உடன் சென்றான் அன்பு மனைவியாக
சுடுநெருப்பில புகுந்துவந்து
புகழுச்சியில் நின்கின்றாள்
அன்புக்காக இவர்அடைந்த
புகழெல்லாம் ஏடுகளில்.
அண்ணனின் பின்சென்ற
தமையனின் மனைவியை
மண்ணுலகம் மறந்ததும் ஏன்?
உடன்சென்ற நங்கையவளோ
சிலகாலம் உடனிருந்து இன்புற்றாள்
தமையனின் மனைவியோ
ஈரேழாண்டுகள்
தனித்திருந்து இளமை நீத்தாள்
ஆசை கணவன் அன்பைத்தாங்கி மனம் தேற்றினாள்
மண்ணுலக ஏடுகளில்
நிழலாகிப்போனாள்
அன்பெனும் பாசவலையில்
இன்னும் எத்தனை ஊர்மிளைகள்?
அயல்நாடு சென்று பொருளீட்டும்
கணவனுக்காக காத்திருக்கும்
அபலைகளின் வாழ்வில்
எச்சமாய் நிற்பது அன்பு ஒன்றே

இளமை தொலைத்த இலக்குமணன் வரலாறும் அந்தோ கொடுமை.
பிள்ளைகளின் வருங்காலம்
பெற்றவர்கள் கடன்சுமைகள்
உடன்பிறப்பின் மனக்குறைகள்
சுகமான சுமையாய் ஏந்தி
பல்லாயிரம் மைல்களுக்கு
அப்பால்
உணவின்றி உறக்கமின்றி
அன்பை மட்டும் சுமந்து
கைப்பொருளை அனுப்பிடுவர் மகிழ்வோடு
உழைத்து ஓய்ந்து நரம்பு சுருண்டு
திரும்பிவரும் வேளையில் பலகுடும்பம் பாதியிலே விட்டுவிடும்
அன்பைக்காட்டி ஏய்த்த கூட்டம்
பகையை மட்டுமே உடன்காட்டும்
கடமை என்று பெயர் சூட்டும்
அன்பால் அடைந்ததைப் பாடுகின்றீர்
அன்பால் இழந்தது
பாடு பொருளானால் குற்றமா?
இங்கே கையறுநிலைக்கும்
காலமுண்டு.

bottom of page