REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Easwari Jawahar - India
Entry No:
519
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு
தொப்புள் கொடி உறவால்
தாய் அன்புக்கு அடிமை
அறிவூட்டிய ஏணியாம்
தந்தை அன்புக்கு அடிமை
ஒருதாய் கருவில் உடனவந்த
உடன்பிறப்புக்கும் அடிமை
அன்பினால் அகக்குருடாகி
அறிவழிந்து வாழ்விழந்தோர் உளர்
வளர்ப்பு அன்னையின்
பாசத்துக்கு பட்டமிழந்து
வனம்புகுந்த ஒருவன் புகழ்
பவனியெலாம் பறைசாற்றும்
உடன்பிறந்த அண்ணனின்
அன்பிற்காக உடன்சென்ற
இளையவனும் இடம்பிடித்தான் ஏட்டினிலே
அண்ணனின் துணைவியோ
கொண்டவனுடன் உடன்சென்றாள்
அன்பு மனைவியாக
சுடுநெருப்பில் புகுந்துவந்து
புகழுச்சியில் நிற்கின்றாள்
அன்புக்காக இவர்அடைந்த
புகழெல்லாம் ஏடுகளில்
அண்ணனின் பின்சென்ற
தமையனின் மனைவியை
மண்ணுலகம் மறந்ததும் ஏன்?
உடன்சென்ற நங்கையவள்
சிலகாலம் உடனிருந்து இன்புற்றாள்
தமையனின் மனையாளோ
ஈரேழாண்டுகள் தனித்திருந்து
இளமை நீத்தாள்
ஆசை கணவன்
வருகை நோக்கி
மனம் தேற்றினாள்
அன்பைத்தாங்கி வாழ்ந்தாள்
மண்ணுலக ஏடுகளில்
நிழலாகிப்போனாள்
அன்பெனும் பாசவலையில்
இன்னும் எத்துணை ஊர்மிளைகள்
ஏன் உங்கள் உடன்பிறப்பாகவும்
உலவிவரலாம்
அயல்நாடு சென்று
பொருள் ஈட்டும்
கணவனுக்காக காத்திருக்கும்
அபலைகளின் வாழ்வினிலே
எச்சமாய் இருப்பது
அன்பு ஒன்றே
பிள்ளைகளின் வருங்காலம்
பெற்றவரின் கடன்சுமைகள்
உடன்பிறப்பின் மனக்குறைகள்
அன்புக்காக சுகமான சுமைஏற்று
இளமை தொலைத்த
இலக்குமணன்கள் வரலாறு
அந்தோ கொடுமை!
ஊனின்றி உறக்கம் தொலைத்து
உறவுக்காக உழைத்து
அன்பை உயிர்மூச்சாக்கி
கைப்பொருளை அனுப்பிடுவர் மகிழ்வோடு
உழைத்து ஓய்ந்து நரம்பு சுருண்டு
திரும்பி வரும் வேளையிலே
பல உறவு பாதியிலே விட்டுஓடும்
அன்பைக்காட்டி ஏய்த்த கூட்டம்
பகையை மட்டும் உடன்காட்டும்
கடமை என்று பெயர் சூட்டும்
அன்பால் அடைந்ததை விட
அன்பால் இழந்தது
பாடுபொருளானால் குற்றமா?
இங்கே
கையறுநிலைக்கும் காலமுண்டு
அன்பெனும் ஆயுதத்தால்
இதயம் துளைக்காதீர்
விலையற்ற அன்பை மறந்து
உறவெனும் காற்றாடி நூலை
அறுக்காதீர்
அன்பெனும் நூலொன்று
மெலிதினும் இனியது
இனிமையை அறியாமல்
அறுத்தெரிதல் பாவம்.
நிலையான பாசவலையை அறுக்காதீர்
சகடக்கால் போல வரும் செல்வம்
சாகும் வரை உடன்வரும் அன்பு
வேசம் காட்டி வாழ்வது இழிவு
அன்புக்கு அடிமையாய் அழிவது மேல்
அதனால்தான் இங்கே
கையறுநிலைக்கும் காலமுண்டு
நன்றி
முனைவர் ஜ.ஈஸ்வரி,
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
இலுப்பைக்குடி,
சிவகங்கை மாவட்டம் 630202
9445929535
manisram610@gmail.com
( வணக்கம் ஐயா, எனது கவிதையை ஈஸ்வரிகாளீஸ்வரன் என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டேன். முழு கவிதையும் பதிவிடுவதற்கு முன்பே தவறுதலாக submit கொடுத்துவிட்டேன். முழுமையான கவிதையை அதே பெயரில் அனுப்பினால் already submitted என்று வருகிறது. எனவே புதிய மின்னஞ்சல் முகவரியில் முழு கவிதையை அனுப்புகிறேன். தவறினை பொறுத்தருள்க.