top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Dr. P. Thamilselvi Gunasekaran - India

Entry No: 

442

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பெண்ணின் அன்பு மனம்
****************************
பெற்றோர்/உடன்பிறந்தோரை
கடவுளின் பரிசாக நினைக்கும்
பித்து மனம்!
குடும்ப கௌரவம் காக்க
ஒழுக்கத்தை உயிராய் பேணும்
கற்பு மனம்!
புகுந்த வீட்டு போராட்டத்தை,
விரக்தி தரும் ஏமாற்றத்தை,
சாமார்த்தியமாய் எதிர்கொள்ளும்
சாதனை மனம்!
தோல்விகளே தொடர்கதையானாலும்
எதுவும் நடக்காதது போல்
புன்னகை அரிதாரம் பூசி வளைய வரும்
சாதூர்ய மனம்!
100 பேர் தன் மகனை/மகளை மட்டம்
தட்டிப் பேசினாலும்/தனியொருவளாய்
விட்டுக் கொடுக்காமல் அரவணைக்கும்
இளகிய மனம்!
கால வெள்ளத்தின் ஓட்டத்தில் நட்பின்
சாயம் வெளுத்துப் போனாலும்/சோலை
வனமாய் அந்நட்பினை ஆராதிக்கும்
தோழமை மனம்!
வழித்தடமாய் அறிவுரை தந்தவர்களை
வாழ்க்கை முழுவதும் கைகூப்பித்
தொழும் நன்றியுள்ள மனம்!
மன்னிப்பை ஏற்க/மறுக்கத் தயங்காத,
தனக்கே வலித்தாலும்
தன்னை நேசித்தவர்களுக்கு
வலிக்கக் கூடாதென நினைத்து,
அன்பை மட்டுமே எதிர்பார்த்து
அன்பினை மட்டுமே தாரை வார்க்கும்...அன்பெனும்
அட்சயப் பாத்திர மனமே
பெண்ணின் மனம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை.

bottom of page