top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Deepika Sri - India

Entry No: 

165

தமிழ் கதை (Tamil Kadhai)

“உனக்கு  நியாபகம் இருக்க  ரேவதி! அன்னைக்கு சரியான மழை,  ஊரே  வெள்ளகாடா இருந்துச்சு.  நீயும் நானும் தூங்கிட்டு இருந்தோம்  யாரோ  கதவை தட்ட, படப்படத்த நெஞ்சத்தோடு எழுந்து கதவை திறக்க சென்றாய்..  நானும் உன் பின்னாடியே எழுந்து வந்தேன்...  ஆனா கரண்ட் இல்லாததால் அந்த  மெழுகுவர்த்தி வெளிச்சத்துல உன் கைய பிடிக்க தவறிட்டேன்..   முதல் தளம் முழுக்க வெள்ளம் புகுந்திருக்க நீயோ  யாரோ  கதவை தட்டறாங்களேனு  பதறி ஓடுன...”
“யாராக இருக்கும் இந்த நேரத்தில் அதுவும் மழைக்கொட்டிட்டு இருக்கையில் மகனும்  மருமகளும் வெளிநாட்டில் இருக்க  நமக்கு இருக்கும் ஒரே ஆதரவு பக்கத்துவீட்டு  கோபி தான்...  அவனும் இந்நேரம் இங்கு வர வாய்ப்பில்லை...  திருடன் வந்திருந்தாலும் இங்கிருந்து நம்மை தவிர வேறெதுவும் எடுத்துச்செல்ல முடியாது  நிச்சயம் யாரோ உதவி கேட்டு தான் கதவை  தட்டுவாங்க ... சாவி எங்க வச்சேனு  பாருங்க” என்று  நீ புலம்பியபடி தேடினாய்....  நானும்  தேடினேன் உன் கையை.... 

சாவி  கிடைக்க  நீயும் என்னை  மறந்து உதவி என்று  வருவோரை உபசரிக்க ஓடினாய்...  கீழே அந்த வெள்ளத்தில்  யாரோ  தட்டும்  கதவு  சத்தம்  உனக்கு கேட்க  தள்ளாடும்  நெருடலான  என் குரல் எப்படி கேட்காமல் போனதோ...

"ரேவதி ரேவதி  என்னையும் கூட்டிட்டு  போயேன்மா... தனியா  ஈர படிக்கட்டல இறங்காத..  ஏற்கனவே  கரண்டும் இல்ல..  தவிப்பாய் நான்  கத்தியது மட்டும் உனக்கு  கேட்கவில்லை... "

நீங்க இங்கயே இருங்க  உங்களை வேற கூட்டிட்டு  திரியமுடியாது...  கீழ  பார்த்துட்டு  வந்துடுறேன்  என்று  கூறிவிட்டு  சென்றாய்  நீரில் நனைந்த உன் பாதம்...  மெழுகுவர்த்தி வெளிச்சதோடு கடந்தது கதவை  திறக்க .... என்னை  இருளில்  தள்ளிவிட்டு... 

ஏம்மா அங்க என்ன சத்தம்...  ஒன்னும் இல்லைங்க கால்  இடறிடுச்சு...  கீழ விழுந்துடேன்...  சமாளிச்சு வந்துடுவேன்  என்று  எதிர்குரல் மட்டும்  கேட்க பரித்தவித்துப்போனேன்....  எங்க  இருக்கமா  நான் வரேன் இரு  என்று  கூறி  இருட்டில்  தள்ளாடியபடி  தடவி கொண்டே வந்தேன் உனக்கென்ன ஆனதோ என்ற கவலையில்... 
வயதின் மூப்பு அப்போது தான் முதல் தடவை உணர்ந்தேன்...  உனக்கு என்ன ஆனதோ... நீயின்றி என் வாழ்வு எப்படியோ என்ற நடுக்கத்தோடு  வந்தேன்....  எங்க இருக்க ரேவதி என்று  நான்  கேட்க  எழ முடியாமல் இருட்டில் நீ பட்டபாடு அப்பப்பா எப்படியோ உன் கையை பற்றி விட்டேன்...  நிம்மதி பெருமூச்சு இப்போது தான் வந்தது...  உன்னை தூக்க நான் பட்ட பாடு இருக்கே.... ...  நமக்கு வயசானதே மறந்து உன்னை அள்ளி எடுத்துக்கொண்டு மேலறினேன்...  அப்போதும்  உனது அந்த செல்ல சினுங்கள் என்னை  யோசிக்க வைத்தது..   நமது இளமை மனதில் தான் உள்ளது  உடலில் இல்லை என்று...  எப்படியோ  மேலே வந்துவிட்டோம்...  மழையும் நின்றது..  மெழுகை ஏற்றினேன்... 
மீண்டும்  கத்தினாய்  ஐயோ கதவை திறக்க மறந்துவிட்டோமே என்றாய்..  பரவாயில்லைமா நம் தவறு ஏதும் இல்லை.... என்றேன்..   புலம்பிய படி  கடந்தது அந்த இரவு....   மெழுகின் வெளிச்சத்தில் ஜொலித்த உன் முகத்தை கண்டவாறே.. 

புகைப்படமாய் இருவரும் பேசிக்கொள்கையில்...........மாறுமோ இந்த காதல்......😍




bottom of page