top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Brindha Annadurai - India

Entry No: 

158

தமிழ் கதை (Tamil Kadhai)

ஒரு பாட்டி பழக்கடை வைத்திருந்தாள். அவளது கடையில் ஒருவர் தினமும் பழங்களை வாங்குவார். ஆனால் வாங்கும் போது இந்த பழங்கள் சரியில்லை, சுவை இல்லை என்று பழித்து கொண்டே ஒரு பழத்தை பாட்டியிடம் கொடுப்பார். அந்த பாட்டியும் அதனை சுவைத்து விட்டு நன்றாக உள்ளதே எனப்பார். இதுவே வாடிக்கையாக தொடர்ந்தது. இதனை கவனித்த ஒரு நபர் இந்த மனிதரிடம், " ஏன் தினமும் இந்த பாட்டியை திட்டுகிரிகள், பழங்கள் சுவையாக தானே உள்ளன? பிறகு ஏன் தினமும் இங்கேயே வாங்குகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சிரித்து கொண்டே சொன்னார்," நான் திட்டி கொண்டே சுவை இல்லை என்று கூறி ஒரு பழத்தைக் கொடுத்தால், இந்த பாட்டி எனக்காக இந்த பழத்தை சாப்பிட்டு விடுவார். பாவம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி, என்னால் முடிந்தது ஒரு பழமாவது சாப்பிட வைக்க நான் இவ்வாறு செய்கிரேன்" என்றார். இதே கேள்வியை பாட்டியிடம் கேட்டபோது,அவளோ,"பாவம் எனக்காக பழம் கொடுக்கிறான் என்று நான் அவனுக்கு கூடுதலாக இரு பழங்கள் வைப்பேன்" என்றாள். இதற்கு பேர் தான் உண்மையான அன்பு......

bottom of page