REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Bhavani Arumugam - India
Entry No:
366
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
பார் எல்லாம்
கார் மேகங்கள் சூழ
கொட்டுதடி மழை கொட்டுதடி-
என் கண்கள்
தேடுதடி உன்னை தேடுதடி...
கருமேகங்களின்
அற்புத பின்னனியிலே
விண்மீனாய் உன் முகம் தெரிய
வாள்மீனாய் நானும் உருகி
போனேனே...
உன் பாதச்சுவடினிலே
நானும் மயங்கி போனேனே...
தென்றல் காற்றாய் நான்
உன்னை வருட
புயல் காற்றாய்
வீசி எறிகிறாயே...!
நிலவாய் நீ
மேகமாய் நான்
காற்றாய் நீ
மரமாய் நான்
மரமாய் நீ - அதில்
கனியாய் நான்
மலராய் நீ
மதுவாய் நான்
உன்னில் நானும் சரணடைந்தேனே...!
விதையாய் நீ
துளிராய் நான்..
இலையாய் நீ
கிளையாய் நான்...
அரும்பாய் நீ
மலராய் நான்
உன்னில் நானும்
சங்கமிக்க ஏற்றுக்கொள்வாயோ
உன் பாதம் பட்ட இடத்தினிலே
முத்தம் தர சம்மதிப்பாயோ...
உன் காதணிகள் கூட
சம்மதமாய் தலையசைக்க...
நீ மட்டும் மௌனமாய்
ஏனடி ஏனடி ஏனடி...
உன் நினைவாலே கூட்டுப்
புழுவாய் துடிக்கிறேனடி...
என்னை ஏற்றுக்
கொள்வாயோ...
என் பூங்கொற்றினை
வாங்கியவள் சம்மதித்தாளே...
கன்னங்கள் சிவக்க
நாணிக் கோணிச்சென்றாளே...
பார்த்ததும் பரவசமடையுதே
மனது பரவசமடையுதே...
செவ்வானம் தோற்ததம்மா
உன் பேரழகினிலே...
நித்தம் நித்தம் உன் அழகினில்
மயங்கி தான் போனேனே...
மரங்கள் பூத்திருக்க
கருமேகங்கள் சூழ்ந்திருக்க...
கெட்டி மேளமாய்
இடிகள் முழங்கிட
இனிய வசந்த காலத்தில்
இனிதாய் திருமணம்
நடந்தனவே....
ஆண்டுகள் பல
சென்றனவே
நம் காதலின் சின்னமாய்
உன்னில் கருவாய் நானிருக்க
நீயோ வலியினில்
துடிக்க
நான் என் செய்வேன்
என் செய்வேன்
வையகமே
இருளாய் தெரிய
கேட்டதடி கேட்டதடி
மழலை சங்கீதம்...
காண்பதெல்லாம்
வியப்பாய் தெரிய நான்
என் தேவதையை
கையிலேந்தி நிற்க
இனிக்குதடி இனிக்குதடி
என் காதல் இனிக்குதடி...!