top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

BHARATHI KANNAMMA - India

Entry No: 

438

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கல்லூரி நாட்கள்
பள்ளிப் பருவம் முடித்து
துள்ளி வந்தேன்
உன் தூய அழகை காண!

உன்னுள் நுழைந்தேன்
கதவுகள் வரவேற்றது -என்னை
வா என்று!

ஆயிரம் கனவுகளுடன்
மூடாமல் திறந்திருந்தது
என் மனக்கதவு!

வண்ணத்துப்பூச்சிகளும்
வண்ண மலர்களும்
என் கண்களை கவர
வர்ணிக்கலானேன்!

எண்ணற்ற ஆசைகளோடு
எண்ணிக்கொண்டே
ஏறி வந்தேன்
உன் படியின் மீது!

வகுப்பு தோழர்கள் வாண்டுகளாய் மாறி இருந்த காட்சி வசந்தம் ஆனது !

முகவரி இன்றி அறிமுகம்
ஆனோம் ஆகச் சிறந்த தோழமைகளாய்!

பாடவேளைகள் பல தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டது!

விடுமுறையை விருப்பம் அற்றுப் போனது விரும்பியவரை காண முடியாததால்!

மதி மறந்து வீதியில் சிரிப்பலையில் நனைந்தோம் நடைபாதையில்!

உணர்வுகளோடு உரையாடல்கள் உற்சாகம் அளித்தது உறக்கத்திலும்!

மரமும் நம் நட்பை தத்தெடுத்துக் கொண்டது நிழல் தந்து!

மரமே உன்னிடம் தண்ணீர் விட்டு விடை பெறவில்லை கண்ணீர் விட்டு விடைபெறுகிறேன்!

புரிந்தும் புரியாததுமாய் படித்தது போதும் என்று புறம் தள்ளியது கல்லூரி ஆன்லைன் வகுப்புகளில்.

சா. பாரதிக்கண்ணம்மா
அரசு கலைக்கல்லூரி
உடுமலைப்பேட்டை

bottom of page