top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ashwini R - India

Entry No: 

292

தமிழ் கதை (Tamil Kadhai)

பாட்டியின் அன்பு
அமுதன் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். அமுதனுடைய பாட்டிக்கு அறுபத்து ஒன்று வயது . பாட்டியின் பெயர் சாரதா. அமுதனுக்கு அவனுடைய பாட்டி என்றால் உயிர். அவனுடைய பாட்டி தினமும் சத்தான சமையலைத் தான் அமுதனுக்கு கொடுப்பார். அமுதனுக்கு பள்ளியில் நெருங்கிய நண்பன் இருக்கிறான். அவன் பெயர் முகில். முகில் தினமும் பீட்சா,பர்கர் போன்ற உணவுகளை தான் உண்பான். ஒரு நாள் முகில் தனது உணவை அமுதனுக்கு கொடுத்து இதை சாப்பிடு என்றான். ஆனால் அமுதனோ எனக்கு இந்த உணவெல்லாம் புடிக்காது வேண்டாம் என்றான்.அதற்கு முகில் என்னுடைய உணவை பார் எப்படி பளபள க்கு ருசியா இருக்கு,இந்தா இதை சாப்பிடு என்றான். அமுதன் அதைவாங்கி சாப்பிட்டான். அமுதனுக்கு அந்த உணவை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை, ஆனால் முகிலுக்காக அதை சாப்பிட்டான். தினமும் பள்ளியில் முகில் கொடுக்கிற உணவை அமுதன் சாப்பிட ஆரம்பித்தான். தன்னுடைய உணவை அப்படியே மிச்சம் வைத்துவிடுவான். அமுதனின் பாட்டி டிபன் பாக்ஸில் சாப்பாட்டு மிச்சம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். ஏன் பா தினமும் சாப்பாட்டு மிச்சம் வைக்கிற என்று அமுதனிடம் கேட்டாள் பாட்டி. அதற்கு அமுதன் போ பாட்டி நீ சமைக்கிறது ஓல்டு ஸ்டைல் இப்போ பீட்சா பர்கர் ன்னு நிறைய உணவு வந்துடுச்சு. நீ செய்யுறது நல்லாவே இல்லை பாட்டி என்றான் அமுதன். அதற்கு பாட்டி அந்த சாப்பாட்டு லாம் உடம்புக்கு ரொம்ப கெடுதல் பா அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்றாள். ஆனால் அமுதனோ பாட்டி சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்தான். போ பாட்டி என்று தன் நண்பர்களுடன் விளையாட சென்றான் அமுதன். அடுத்த நாள் அமுதனின் நண்பன் முகில் பள்ளிக்கு வரவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களாக முகில் வரவில்லை. பள்ளி முடிந்ததும் முகிலுக்கு போன் பன்னான் அமுதன். ஆனால் முகில் போன் எடுக்கவில்லை. அடுத்த நாள் முகில் அமுதனுக்கு போன் பண்ணி பேசினான். அமுதன்,ஏண்டா பள்ளிக்கு வரல என்று முகிலிடம் கேட்டான்.அதற்கு முகில் நான் தினமும் பீட்சா பர்கர் போன்ற உணவை சாப்பிடறதனால என் உடம்பு ரொம்ப மோசமாகிடுச்சு டா, சாரி டா நான் தினமும் என்னுடைய உணவை உனக்கு கொடுத்ததோல் உன் பாட்டி உனக்கு கொடுத்த சாப்பாட்டை நீ சாப்பிடல சாரி டா என்றான் முகில். அதற்கு அமுதன் பரவால டா நம்ப இனிமேல் நல்ல உணவை சாப்பிடுவோம்,உடம்ப பாத்துக்கோ என்றான். பிறகு அமுதன் தன் பாட்டியிடம் சாரி பாட்டி நீங்க கொடுக்கிற உணவோட அருமை தெரியாதனால இப்படி பண்ணிட்டன். அதற்கு பாட்டி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, பிஸ்கட், ஐஸ்கிரீம், ரசாயணம் கலந்த கூல்டிரிங்ஸ் இதெல்லாம் நம்ப உடலுக்கு நிறைய பிரச்சனைகளை குடுக்கும் பா,இந்த திண்பண்டம் எல்லாம் நம்ம கண்ணை கவரும் வகையில் இருப்பதுக்காக ரசாயணமும், கண்ணை கவரும் வகையில் இருப்பதுக்காக பதப்படுத்திகளும் கலந்து தராங்க இது நம்ப உல் உறுப்புகளை பாதிக்கும் புரியுதா பா என்றாள். ம்ம் இப்போ புரியுது பாட்டி. இனிமேல் கேடு தரும் உணவுகளை நான் சாப்பிட மாட்டேன் நீங்க கொடுக்கிற ஆரோக்கியமான உணவை தான் நான் சாப்பிடுவேன் என்றான் அமுதன். கடைசியில் பாட்டியின் அன்பு அமுதனுக்கு புரிந்துவிட்டது.

bottom of page