REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Asha bharathi - India
Entry No:
98
English Poetry
An Immortal Glorious Soul
(An Elegy written on my Grandmother's death)
A glorious soul had gone so farther!
That's no-one but my lovely grandmother.
She was covered with garlands &roses,
I was in the bed of thorny bushes.
Persons in crowd to speak her fame,
There's no-one to call her pet name,
She'll be shining as a star in the sky,
Says our mythology.
But I muddled to find her in star cluster
Oh! It's my apology,
The birds we feed;
The grains we seed;
The books we read;
The lanes we walked;
And the tales we talked;
Are all searching that glorious soul,
They never find that; but only howl.
The meadows are weeping at every morning,
Longing for you eternal love; they are mourning.
Who can tell me some parable stories?
That destroy my horrible nights and worries.
Forgive all my blunders,
And fill me with some wonders!
Appear in front of me at once,
I fail to save you; Oh! I'm a dunce.
Oh! My IMMORTAL GLORIOUS SOUL!
I'll accompany you than to weep
But I have some promises to keep.
Still you are living in my heart;
Like the IMMORTAL ART.
-V.Ashabharathi
Entry No:
100
தமிழ் கதை (Tamil Kadhai)
(பெயரில்லாத பாட்டி)
பாட்டியின் நினைவு நாள். அன்று தோழியுடன் சென்று ஆதரவற்றவர்ளுக்கு உணவளிப்பது கல்லூரியில் பயிலும் நிஷாவின் வழக்கம். நீண்ட நேரம் ஆனது. ஆதரவற்றோர் ஒருவர் கூட கண்ணில் தென்படவில்லை. நிஷாவின் கண்களில் கவலையுடன் கூடிய ஓர் ஏமாற்றம். உணவு பொட்டலங்களுடன் திரும்பிச் செல்ல ஆயத்தமானார்கள் நிஷாவும் அவளின் தோழியும். சற்று தூரத்தில் , கந்தலான புடவையில் ஒரு 60 வயது மதிக்கத் தகுந்த பெண்மணி. தயக்கத்துடனேயே அருகில் சென்றனர் இருவரும். "பசிக்கிறதா , இந்த உணவு வாங்கிக்கிறீங்களா? என் பாட்டியின் நினைவு நாள் இன்று" என்றாள் நிஷா. விரக்தியை மறைக்கும் சிறு புன்னகையுடன் அந்த வயதானவள். " என்ன படிக்கிறீங்க ரெண்டு பேரும்? " என்றாள். ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு. என்றவுடன், அந்த விரக்தி நிறைந்த கண்களில் வெளிப்பட்டது வெளிச்சம் . அந்த வயதானவள் அடைந்த ஆனந்தத்திற்கு அர்த்தம் அறியாமல் இவர்கள் இருவரும். வார்த்தைகள் தெளிவாக இல்லாத அந்த வயதானவளின் வாயிலிருந்து வந்தது அசர வைக்கும் ஆங்கிலம். " வொர்க் ஹார்ட் சில்ரன் , ஆல் தி பெஸ்ட், ,தேங்க்யு பார் தி லன்ச்". அதிர்ந்து போன அவர்கள் , உங்க பேரு என்ன? என்றனர். அதற்கு அவள், பெயரெல்லாம் எதற்கு , மீண்டும் ஆங்கிலத்தில்" ஐ ஆம் யுவர் ஆனனிமஸ்(பெயரில்லாத) க்ரேண்ட் மதர்" , என்று சொல்லி புன்னகையுடன்
, உணவு பொட்டலத்தை பிரித்த படி, அழுக்கேறிய உடையில், அந்த அறுபது வயது பெண்மணி நகர்ந்து சென்றாள் . ஆனால் அன்றிலிருந்து அடி நகரவில்லை நிஷாவின்
மனதிலிருந்து இன்றுவரை அந்த ஆனனிமஸ் க்ரேண்ட் மதரும்
, ஆதரவற்றோர்க்கு உதவும் அவளின் வழக்கமும்.
-வி .ஆஷாபாரதி
Entry No:
97
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
என் அன்னையின் அன்னை
வேடிக்கைக் கதைகள் பல கூறி,
வீட்டையே விளையாட்டு மைதானமாக்கிய -என் அன்னையின் அன்னை
விண்மீன் ஆனாள் இன்று!
உலகிற்கு விடை கொடுத்துச் சென்று!-அன்றிலிருந்து,
விழும் எரிநட்சத்திரங்களெல்லாம்
விட்டுச் சென்றவளின்
வருகை தானோ என
விண்ணையே நோக்கி -என்
விழிகள் இன்று வரை.
-வி .ஆஷாபாரதி