top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Arun Pandiyan - India

Entry No: 

219

தமிழ் கதை (Tamil Kadhai)

நாம் நினைப்பது?
மாடிப் படிகளில் அவசரமாக ஏறினான் ஜெகன். முதல் மாடியில் இருக்கும் அறையை நோக்கி சென்று, அந்த அறையின் கதவைத் தட்டினான். கதவு வெளிப்புறமாக திறந்தது. அப்போது, கதவு ஜெகனின் கையில் இருந்த கைபேசியில் பட்டு கைபேசி கீழே விழுந்தது. உடனே அந்த கைபேசியை எடுத்து தனது கால்சட்டைப்பைக்குள் வைத்தான் ஜெகன். கதவைத் திறந்து வெளியே வந்த ஆனந்த்,
“டேய், என்னடா ஆச்சு? ஏன் டென்சனா இருக்க?”
வாய்திறந்தும் வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்து பதில் பேசினான் ஜெகன்.
“அம்மா...அம்மாவக் காணம் டா!”
“என்னடா சொல்ற? அவங்க ஊர்ல தான இருக்காங்க”
“இல்ல டா, என்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு ரெண்டு நாள் லீவு போட்டு என்ன ஊருக்கு வர சொன்னங்க. நானும் ஆபீஸ்ல லீவு கேட்டேன். அதுக்கு அந்த மேனேஜர் ரொம்ப எலக்காரமா பேசிட்டான். அவன் மேல இருக்குற கோவத்துல அம்மாக்கு கால் பன்னி, எனக்கு லீவு கிடைக்கல, என்ன பாக்கனும்னா நீ கிளம்பி வான்னு சொல்லிட்டேன்”.
“ஏன்டா? இப்படி பேசுன, அவங்களே உங்க அப்பா இறந்த சோகத்துல இருக்காங்க, ஊர்லயும் தனியாதா இருக்காங்க அவங்ககிட்ட பொய்....”
“அதனாலதாண்டா சாரி சொல்லலாம்னு திரும்பவும் கால் பன்னேன். அப்போ அவங்க திருச்சியை தாண்டி பஸ்ல சென்னைக்கு வந்துட்டு இருக்குறதா சொன்னாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, அவங்கள திரும்பிப் போக சொல்லவும் முடியல, அதனால அவங்களை கவனமா பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கிட்டு கால் பன்னுங்கன்னு சொன்னேன்”.
“அப்போ அம்மா சென்னைக்கு வந்துட்டாங்களா?”
“தெரியலடா, நா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பன்னேன். ரெண்டு தடவை புல் ரிங் அடிச்சும் அவங்க எடுக்களை. அப்புறம் கால் பன்னா சுவிட்ச் ஆஃப் ன்னு வருது எனக்கு ரொம்ப பயமா இருக்குடா”.
“சரி, பயப்படாத அம்மாக்கு ஒன்னும் ஆகாது”.
“அம்மாக்கு நா முதல்ல கால் பன்னப்போ திருச்சிய தாண்டுனதா சொன்னாங்க. அந்த டைம் கணக்கு பன்னி பாத்தா இந்நேரம் அவங்க கோயம்பேடு வந்திருக்கனும், எனக்கு என்ன பன்னனும்னு தெரியலடா”
“சரி பதட்டப்படாத அம்மா பஸ் ஸ்டாண்ட்லதா இருப்பாங்க கண்டுபுடிச்சிடலாம். நானும் உன்கூட வர்றேன். என்வண்டியிலேயே கோயம்பேடு போயிடலாம்”
என்று சொல்லிவிட்டு ஆனந்த் தயாராகினான்.
இருவரும் அந்த அறையிலிருந்து வெளியே வந்து கதவை மூடிவிட்டு படிகளில் இறங்கி கீழே வந்து ஆனந்தின் மோட்டார் வாகனத்தில் புறப்பட்டனர்.
வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஆனந்த் கேட்டான்,
“டேய் இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் சொன்னியா?”
“இல்லடா”.
“கால் பன்னி சொல்லிடுடா, உன் மேனேஜர் கேரெக்டர் வேற சரியில்லைன்னு சொல்ற”.
“சரி நேர்லயே போய் சொல்லிடலாம், முதல்ல என்னோட ஆபீஸ்க்கு போ”.
என்றான் ஜெகன்.
வாகனம் வேகமெடுத்து ஜெகனின் அலுவலகத்திற்குள் சென்றது.
“டேய் நீ இங்கயே வெயிட் பன்னு, நா போய் சொல்லிட்டு வந்துடுறேன்”.
ஆனந்த் வாகனத்தின் அருகிலேயே இருந்தான். ஜெகன் அலுவலகத்திற்குள் நுழைந்து வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம்
“மேனேஜர் இருக்காரா?” என்று கேட்டான்.
“இப்பதா வந்தாரு”.
என்று அந்த பெண் சொல்லி முடிக்கும் முன் ஜெகன் மேனேஜரின் அறைக்குள் சென்றான். அங்கிருந்த மேனேஜர் ஜெகனை பார்த்ததும்
“இங்க பாரு ஜெகன் நான்தா லீவ் தரமாட்டேன்னு சொல்லிட்டேன்ல அப்றம் ஏன் அடிக்கடி வந்து லீவ் கேட்டுட்டு இருக்க”.
“ஒரு நிமிஷம், நா உங்க கிட்ட லீவ் கேக்க வரல, லீவ் போடப்போறேன்னு சொல்லிட்டு போகலாம்னுதா வந்தேன்”.
“என்ன சொல்ற?”
“உன்னாலதா இன்னைக்கு நா என் அம்மாவை துலச்சுட்டு தேடிட்டு இருக்கேன்”.
“நீ சொல்றது எனக்கு புரியல”.
“உனக்கு புரியாது, அதை புரிய வைக்கிறதுக்கான நேரமும் என்கிட்ட இல்ல. ஆனா என் அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன சும்மா விடமாட்டேன்”
என்று சொல்லிவிட்டு அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தான். ஜெகன் வெளியே வருவதை பார்த்த ஆனந்த் வாகனத்தை தயார் நிலையில் வைத்தான். ஜெகன் வாகனத்தில் ஏறியதும் வாகனம் வேகமாக கிளம்பியது.
“உன் மேனேஜர் என்ன சொன்னான்?”
“அவன் என்ன சொல்லுவான் அவன்கிட்ட நா தா சொல்லிட்டு வந்தேன்”.
“என்ன சொன்ன?”
“என்னோட அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன சும்மா விடமாட்டேன்னு, சொல்லிட்டு வந்தேன்”
“ஏன்டா அப்படி சொன்ன?”
“இவன்ல்லாம் மனிசனே இல்லடா, மனிதாபிமானம் இல்லாத மிருகம் லீவோ, பெர்மிசனோ கேக்க போனா எதோ பிச்சக்காரன பாக்குறமதிரி பாப்பான்”.
“சரி பஸ் ஸ்டாண்ட் வந்துருச்சு, மதுரை பஸ் எங்க நிக்கும்னு தெரியும்ல”.
“ம், நாலாவது பிளாட் பாம்ல இருக்கும்”.
“நீ போய் அம்மாவ தேடு, நா வண்டிய பார்க்கிங்ல நிருத்திட்டு வர்றேன்”.
என்று ஆனந்த் கூற ஜெகன் நான்காவது நடைமேடைக்கு ஓடினான். வண்டியை நிறுத்திவிட்டு ஆனந்தும் ஜெகன் இருக்கும் இடத்திற்கு சென்றான்.
பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. இருவரும் மதுரையிலிருந்து வந்த பேருந்து ஒவ்வொன்றின் அருகிலும் சென்று பார்த்தனர். பின் அங்கிருந்த நடத்துனர்களிடம் ஜெகனின் அம்மா வை பற்றிய விபரங்களை சொல்லி விசாரித்தனர். ஆனால் எந்த நடத்துனரும் அவர்கள் எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லை.
மற்றொரு இடத்தில் வயதான பெண் ஒருவர் தான் தவறுதலாக பேருந்தில் ஏறி சென்னைக்கு வந்ததாகவும், சென்னைக்கு முதல்முறையாக வருவதாகவும், இங்கு யாரையும் எனக்கு தெரியாது எனவும், திரும்பி ஊருக்கு போக பணம் இல்லை யாரவது பணம் தாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நான்கு நண்பர்களில் ஒருவன் இவங்களுக்கு வேற வேலையே இல்லை. இப்படித்தான் பஸ்க்கு காசு வேனும் சாப்ட காசு வேணும்னு வாங்கிட்டு போய் சரக்கடிப்பாங்க என்று சொன்னான். அதை கேட்ட ஜெகனுக்கு அவனது அம்மாவின் நிலை ஞாபகம் வர அந்த இளைஞன் மீது கோபப்பட்டு அவனை அடிக்கப் போய்விட்டான், ஆனந்த் அவனை பிடித்திழுத்து தனியே அழைத்து வந்தான்.
அப்போது அந்த இளைஞன்,
“அவங்கள சொன்னா உங்களுக்கு ஏன் கோபம் வருது” என்று கேட்க.
“சாரி பாஸ், அவனுக்கு ஒரு ப்ராப்ளம் அத்தான் அப்படி நடந்துகிட்டான் நீங்க போங்க நான் பாத்துக்கிறேன்”. என்று ஆனந்த் கூறினான்.
“ஏன்டா அவனை அடிக்கப் போன?”
கண்களில் கண்ணீருடன்,
“இல்லடா, அவங்களுக்கும் ஏ அம்மாவோட வயசுதாண்டா இருக்கும்”.
என்று ஆனந்திடம் சொல்லிக்கொண்டே அந்த பெண்ணிடம் போய்,
“நீங்க எந்த ஊருக்கு போகணும்?” என்று கேட்டான்.
“விழுப்புரம்”.
என்று அந்த பெண் கூற அவருக்கு இருநூறு ரூபாய்யை கொடுத்துவிட்டு ஆனந்திடம் வந்தான்.
“அவங்க சொல்றது உண்மையா, பொய்யான்னு கூட தெரியாம பேசுறாங்க கொஞ்ச கூட மனிதாபிமானம் இல்லாம”,
“டேய் அந்த மாதிரி பொய் சொல்றவங்க உண்மைலயே இருக்காங்க அதனாலதா அவன் அப்படி சொல்றான்”.
“இருக்கலாம், ஆனா அவங்க சொல்றது உண்மையா, பொய்யான்னு தெரிஞ்சுக்க முயற்சி பன்னனும் அது புரியாம அவங்கள உதாசினப்படுத்தக்கூடாது”.
“டேய், நம்மாலே நிறைய தடவை இந்தமாதிரி பணம் கேகுரவங்களை பொய்சொல்றங்கன்னு சொல்லிருக்கோம்”.
“எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும் நமக்குன்னு வர்றப்போதாண்டா அதோட வலியே புரியுது. இந்தமாதிரி நிலைமைல இருக்குறவங்க சொல்றது பொய்யின்னு நானும் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறப்போ, எனக்கே என்மேல கோவம் வருதுடா”.
“சரி அதை விடு அம்மாக்கு உன்னோட மொபைல் நம்பர் தெரியுமா?”
“தெரியும்டா”
“அப்போ அவங்க கால் பன்னி இருக்கலாம்ல, ஏன் பன்னாம இருக்காங்க உன்னோட மொபைல்யை எடு”
ஜெகன் அவனுடைய கை பேசியை தனது கால் சட்டை பைக்குள் இருந்து எடுத்தான்.
“டேய் மொபைல் சுவிட்ச் ஆப்ல இருக்குடா”.
“சீக்கிரம் ஆன் பன்னுடா”.
“ஆன் பன்னிட்டேன் ஓபன் ஆயிட்டு இருக்கு”.
ஜெகன் கைபேசி உயிர்த்தெழுந்ததும் அழைப்புமணி அடித்தது.
“எதோ புது நம்பர்ல இருந்து கால் வருதுடா”. என்றான் ஜெகன்.
“எடுத்து பேசுடா”
“ஹலோ”
“ஜெகனு நா அம்மா பெசுறேன்ப்பா”.
என்று கனிந்த குரலுடன் ஜெகனின் அம்மா பேசினார்கள். அந்த குரலை கேட்டதும் ஜெகனுக்கு உச்சந்தலை சிலிர்த்து அழுகையும் சிரிப்பும் கலந்த குரலுடன்,
”அம்மா...... எங்கமா இருக்கீங்க?”
“இங்க பஸ் ஸ்டண்ட்ல தாம்பா இருக்கேன்”.
“எந்த இடத்துலமா?”
“எனக்கு சரியா தெரியலைப்பா, இங்க ஒரு பையன் கிட்ட சொல்லி உனக்கு ஃபோன் போட்டு கொடுக்க சொன்னேன்”.
“உங்க ஃபோன் என்ன ஆச்சும்மா?”
“என்னோட ஃபோன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆய்டுச்சுப்பா, இருப்பா அந்த பையன் கிட்ட ஃபோன் -ஐ கொடுக்குறேன்”.
“ஹலோ”
“சொல்லுங்க ப்ரோ”.
“ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ”.
“பரவாயில்ல”
“நீங்க கரெக்டா எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க ப்ரோ?”
“ம், இப்போ நாங்க பஸ் வெளிய வர்ற இடத்துக்கு பக்கத்துல இருக்குற டீ கடையில நிக்கிறோம். உங்கம்மா தான் உங்களை பாக்காம எதுவும் சாப்டமாடேன்றாங்க. சோ கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்றார் அந்த இளைஞர்.
“இதோ வந்துட்டேன் ப்ரோ”.
என்று கூறி ஜெகன் ஓட ஆரம்பித்தான்.
“டேய் என்னடா ஆச்சு?”
“அம்மா பஸ் ஸ்டண்ட்க்கு வெளிய தான் இருக்காங்க”.
என்று ஜெகன் சொன்னதும் ஆனந்த், ஜெகனை பின்தொடர்ந்தான். இருவரும் பேருந்து நிலையத்திற்க்கு வெளியே ஓடினார்கள். அங்கே இருந்த ஒரு தேநீர் கடையில் ஒரு பையை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு சோகமான முகத்துடன் ஜெகனின் அம்மா நின்று கொண்டிருந்தார்கள்.
அவரை பார்த்ததும் ஜெகனுக்கு பேச்சு வரவில்லை ஆனாலும் அழுகையுடன் பேசினான்.
“என்ன மன்னிச்சிடுங்கம்மா நா உங்க கிட்ட கோபமா பேசியிருக்க கூடாது”.
“இல்லப்பா நா உன்கிட்ட கூட சொல்லாம பஸ் ஏறி சென்னைக்கு வந்ததுதான் தப்பு” என்றார்.
அப்போது ஆனந்த் அந்த இளைஞனிடம் பேசினான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார், அம்மாவ எங்க பாத்தீங்க?”
“ஆக்சுலா நானும் அம்மா வந்த பஸ்ல தா வந்தேன். பஸ்ல இருந்து இறங்குனதும் கொஞ்சம் தயக்கமாவே இருந்தாங்க அப்புறம் என்கிட்ட வந்து பேசுனாங்க, அவங்களோட பையன பாக்க சென்னை வந்ததாவும், இப்போ அவங்களோட மொபைல் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. அப்புறம் அவங்க பையன் மொபைல் நம்பர் தெரியும்ன்னு சொன்னாங்க, அவங்க சொன்னதுல இருந்து அவருக்கு ட்ரை பன்னிட்டு இருந்தேன் ஆனா சுவிட்ச் ஆஃப் ன்னு வந்துச்சு”.
“அவனோட மொபைல் கீழ விழுந்ததுல சுவிட்ச் ஆஃப் ஆய்டுச்சு அதை நாங்க கவனிக்கல”.
“சரி பரவாயில்லை அம்மாவுக்கு சாப்ட ஏதாவது வாங்கிகொடுங்க. உங்கள பாக்காம எதுவும் சாப்ட மாட்டேன்ட்டாங்க. எனக்கு லேட் ஆய்டுச்சு நா கிளம்புறேன்”.
என்று சொல்லிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் வந்து,
”ப்ரோ வீட்டுல இருக்குற பெரியவங்கள இப்படி தனியா டிராவல் பன்ன விடாதீங்க”. என்று கூறிவிட்டு நடந்தார்.

bottom of page