top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Arun Gowsick - India

Entry No: 

175

தமிழ் கதை (Tamil Kadhai)

பெண் உடல் அல்ல உயிர்
(Pengal udal alla uyire)



அம்மா: பாப்பா நான் கடைக்கு போய் சில பொருட்கள் வாங்கிட்டு வருகிறேன் அது வரை நீ வீட்டிலேயே இரு

சரி அம்மா

அந்த வழியில் சென்ற ஒரு அரக்கன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஓடி விட்டான்

அந்த குழந்தைக்கு ஆறு வயது தான் அவள் அழுதுகொண்டே அம்மா அம்மா என்று கத்துகிறாள்

அவள் அம்மா வும் கடைக்கு சென்று சிறிது தாமதமாக வீட்டுக்கு வந்து பார்க்கும் போது அவள் உடைகள் கிழித்து சிறு காயங்களோடு இறந்து கிடக்கிறாள்.

அவள் அம்மா அழுதுகொண்டே இருக்கிறாள் அவள் அருகில் ஒரு காகிதத்தை எடுத்து பார்க்கிறாள்

அதில் அந்த குழந்தை முதல் மற்றும் கடைகியாக எழுதிய ஒரு கடிதம்

அம்மா அம்மா நான் எத்தனையோ முறை கத்தியும் நீ வரவில்லை ஏன் மா

நான் இப்போ தான் உன் கைய புடிச்சி எழுந்து நடக்குறத்துக்குள்ள திரும்பவும் என்ன மண்ணுக்குள்ள மூடிடுவியா மா, உன் கருவரைக்குள்ள தான் இருட்டா இருக்கு ன்னு இந்த உலகத்த நான் பார்க்கலாம் ன்னு இருந்தேன் , நான் என்ன மா தப்பு செஞ்சேன் என்ன ஏன் மா கடவுள் தன்டிச்சாறு , நீ தானே சொல்லுவ யாரு தப்பு பண்ணுறாங்களோ அவங்கள கடவுள் பாத்துபாருனு , என் உடலை பங்கு போட்ட சில காம நரிகள் வாழும் காட்டில் நீயும் எப்படி மா வாழ்ந்த என் கனவுகள் கலைந்திட என் மூச்சு காற்றும் நின்று போகிட உடலுக்காக ஓர் உயிரை கொல்லும் வஞ்சக நாட்டில் நான் இனி மறு ஜென்மம் பிறந்திட மறுக்கிறேன் , சிரித்து விளையாட நான் இனி எழுந்து வருவேன் னா இல்லை சிதைத்த உடலை சிற்பமாக நான் எழுவேனா என்று தெரியவில்லை, அவங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர்கள் தானே , தெரியவில்லை யா ஒவ்வொரு பெண்களின் வலி என்னவென்று , நான் மட்டும் போகிறேன், இனியாவது பிறருக்கு சொல்லி தாருங்கள் பெண்கள் உடலுக்கு மட்டும் தேவையில்லை, உன்னை போல ஒரு உயிரை பெற்றெடுக்க என்று....🙏🙏🙏

BY : அruண்கௌcக்

bottom of page