REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Arivalagan Kanagasabapathy - India
Entry No:
192
தமிழ் கதை (Tamil Kadhai)
அன்பின் அழகு
சிவகாசி ஊரில் உள்ள ஒரு பட்டாசு ஆலை ஒன்றில் திரு.மாரியப்பன் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரு கண்களும் தெரியாது. அவருடைய வயது 55 வயது.தினசரி காலை ஐந்து மணிக்கே எழுந்து விடுவார் . அவர் குளித்து வேலைக்கு புறப்பட தயாராக அவருடைய மனைவி மாரியம்மாளும் நான்கு மணிக்கே எழுந்து தன் கணவருக்கு காலை மாலை இரண்டு வேளையும் சேர்த்து சமையல் செய்து கொடுத்து விடுவார்.
இவர்களுடைய மகள் மாளவிகா. அவளுக்கு படிப்பில் மிகவும் ஆர்வம். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி என்ற பெயரை எடுத்து தன்னுடைய பெற்றோர்களுக்கும் தான் படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்து தந்தார். இவர்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தன்னுடைய மகளை நல்ல கல்லூரியில் பயில வைத்து அவளை நல்ல பணியில் அமர்த்துவதே மாரியப்பனின் ஆசை.
ஒரு நாள் மாரியப்பன் வேலைக்கு புறப்படும்போது சார் பேப்பர் பேப்பர் என்று ஒரு குரல் ஒலித்துக்கொண்டே அவர் இல்லத்தை நோக்கி வந்தது. அவர் குரலை கேட்டதும் சார் சார் அன்பழகன் சார் தானே என்றார். சார் ப்ளீஸ் நீங்கள் உங்கள் பணியை முடித்துவிட்டு வரும் போது என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடனும் சார் என்றார் மாரியப்பன். அன்பழகனும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சரி சார் நான் வந்து கூட்டிக்கொண்டு போய் பஸ் ஏற்றி விடுகிறேன் சார் என்றார்.
பார்வையற்றவர் என்பதால் மாரியப்பனுக்கு அடுத்தவரின் உதவி மிகவும் அவசியமாக இருந்தது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், பேருந்தில் பயணம் செய்வதற்கும், சாலையைக் கடப்பதற்கும், மற்றும் அனைத்து செயல்களுக்கும் அடுத்தவரின் துணை அவருக்கு தேவைப்பட்டது.
சிறிது நேரம் கழித்து மாரியப்பனை அழைத்துக்கொண்டு நான்கு வழிச் சாலையை கடந்துபோய் பேருந்தில் ஏற்றிவிட்டார் அன்பழகன். இந்த சம்பவம் மாரியப்பன் உடைய மனதில் நீங்கா நினைவுகளோடு பிறந்தன.அதேபோன்று எத்தனையோ பேர் அவருக்கு உதவி செய்ததை மறக்க முடியாததை எண்ணி நினைவுகளுடன், உறக்கத்திலிருந்து எழுந்தார்.
சுயநலம் பரவிக்கிடக்கும் இந்த உலகில் அன்பழகனை போல உதவி செய்து, அடுத்தவருக்கு அன்பை கொட்டி தீர்க்கும் மனிதர்களும் இவ்வுலகில் தான் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்கள் வியாபித்து இருக்கும் வரை இந்த உலகில் அன்பு என்றும் பொய்க்காது. இவரின் இந்த செயல்தான் பேரன்பின் வெளிப்பாடு.