REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
ANTONY SAHAYARAJ - Malawi
Entry No:
33
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
முதலும் முடிவும் இல்லா
உலகின் முகவரி தேடி
நாம் போகலாம்..
காதல் உணர்ந்த இதயமாய்
அதில் வாழலாம்..
அழகே.
என் இதய உதயமே உந்தன்
பெயரில் தானே.
காதல் இல்லா வாழ்க்கை இல்லை..
காமம் இல்லா காதல் இல்லை
என் எண்ணத்தின் ஆசை எழுத்துக்களாக..
என் எழுத்துக்கள் அனைத்தும் என்னவளுக்காக.
கண் பார்க்க கவிதை வந்தது காற்றோடு காமம் வந்தது ஓரம் மாறிய உன் உடை வழியே
பூப்போன்ற உன் இதழுக்கு மைப் போட்டு அழகு பார்க்க நான் வேண்டும்...!
உன் இதழ் அசைந்தாலே போதும்..,என் இதயம் பல துகள்களாகுமே.
முதலும் முடிவும் இல்லா
உலகின் முகவரி தேடி
நாம் போகலாம்..
காதல் உணர்ந்த இதயமாய்
அதில் வாழலாம்..
அழகே.
என் இதய உதயமே உந்தன்
பெயரில் தானே.
உன் பெண்மை ஓர் வீணை
இசை மீட்டும் போது.
ஞான விழியில்
ஞாயிறு ஒளியில்
காதல் உலகை சாய்த்தவள்
இவளை காணும் உலகை
காப்பவள்.. தேக மேக
வீட்டிளே தென்றல் வீச பாய்பவளே
ஈர நீரை சிந்தியே
என் நெஞ்சின் தாகம் தீர்ப்பவள்.
கார் முகில் கண்கலங்கும்
இலையுதிர் காலம்
காதல் போர் களத்தில்
வடுக்களோடு விழி துளிகள்
மொழி பேசும் நேரம் -
ஈரம் நிறைந்த
ரோஜாக்களின் இமை
திறக்க சொன்னாய்யோ
காதல் முகம் காண..
கண்கள் வடித்த உருவங்களில்
கருவறை தேனே.. காதல்
பூக்கள் சேர்க்கும் இதயத்தின்
வானே..
முதலும் முடிவும் இல்லா
உலகின் முகவரி தேடி
நாம் போகலாம்..
காதல் உணர்ந்த இதயமாய்
அதில் வாழலாம்..
அழகே.
என் இதய உதயமே உந்தன்
பெயரில் தானே.