REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Antony Jamuna - India
Entry No:
463
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவி எழுத காதல் ஒன்றும் ககமும் கச்சிதமும் அல்ல
அது முகவரியே இல்லாமல் அலையும் தபால்!
ஆத்திகம் நாத்திகம் இரண்டிற்குமான கடிவாளம்!
இச்சாபத்தியம் காக்கத்தெரிந்த மோகாசனம்!
ஈசலுக்குள்ளும் ஜோதி ஏற்றும் மௌனதீபம்!
உயிர்களைப் பற்றி எரிக்கும் அக்கினி!
ஊன் உருக்கி குருதி குடிக்கும் காட்டேரி!
எல்லோரும் விரும்பித்தேடும் பதிலற்ற கேள்வியான சித்திரவதை!
ஏழுலகத்தையும் ஆட்சிசெய்யும் ஏகநாதன்
ஐயம் கொளலாகா ஐம்புல அறிவு!
ஒவ்வொரு ஜீவனையும் உயர்த்தவும் தாழ்த்தவும் தெரிந்த ஒண்டன்!
ஓய்வின்றி உறவாடிக்கெடுக்கும் ஓங்கல்!
ஔடதமே இல்லா வலிதரும் ஔ!
கல்லுக்குள்ளும் கசியும் ஈரம்!
காற்றில் பரவிநிற்கும் சுவாசம்!
கிறங்கடிக்கச்செய்யும் போதை!
கீழ்பாக்கம் அனுப்பும் பைத்தியம்!
குலம் கெடுக்கும் குற்றம்!
கூர்மையான முனை கொண்ட வாள்!
கெடு வைத்து கெடுதி செய்யும் கெழி!
கேளாரையும் கேளனாக்கும் கேழ்பு!
கைக்கிளை கொண்டு கைதியாகும் கைகோள்!
கொச்சனுக்கும் அவன் அப்பனுக்கும் கொடிநிலை!
கோசரனையும் விட்டுவைக்காத கோதுகம்!
கௌரவமாக கௌஞ்சி பணிசெய்யும் மாயம்!
இக் காதல் காதல் காதல்!
காதல் போயின் சாதல் சாதல் சாதல்!