REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Anjali Loganathan - India

Entry No: 

129

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

என்ன வாழ்க்கைடா இது...
உன் முகம் பார்த்து பேசியதில்லை
உன் காதல் பார்வை கண்டதில்லை
உன் கதகதப்பு உணர்ந்ததில்லை
உன் வாசனை தெரிந்ததில்லை
உன் முத்தங்களின் ஈரம் பட்டதில்லை
பார்த்ததும், உணர்ந்ததும், தெரிந்ததும்
உன் உள்ளம் மட்டுமே - இருந்தும்
நீ வருவாய் என என் தேடலும்,
எதிர்பார்ப்பும் நீடித்துக் கொண்டே இருக்கும்
உன் முகம் காணும் வரை - அதுவரையில்
உனக்கு எழுதிய, எழுதும் சில
காதல் கவிதைகள் நீ
வாசிப்பதற்காக மட்டுமே திறக்கப்படும்...
சில மனதின் பக்கங்களில் மறைக்கப்பட்டும்,
பல இங்கு பகிரப்பட்டும் என்றாவது இவை
உன்னிடம் வெளிபடலாம் அன்று
என் காதல் அடுத்த நிலையை அடைந்திருக்கும்.... - இருந்தும்,
ஏனோ கனவுகள் சுமந்த
எழுத்துக்களிலும், உணர்வுகள் சுமந்த
வார்த்தைகளிலும் மட்டுமே இருந்து
தீட்டப்படாத ஓவியமாய் ஆனது -
" நம் காதல்"