REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Andhuvan Prakash - India
Entry No:
221
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு
என்றும் உலகில் அழியா சொல் ...
அன்பு
ஆறறிவு படைத்த நமக்கு தாயின் கருவறையில் கிடைப்பது...
அன்பு
கருவறையில் நாம் தரும் ஒவ்வொரு உதைக்கும் தாயின் முகத்தில் புன்னகை மலர்வது...
அன்பு
ஜனனத்தின் போது நம் அழுகுரல் கேட்டு சப்த நாடிகளையும் அடக்கி தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவைப்பது...
அன்பு
நம் பிஞ்சு பாதம் தந்தையின் நெஞ்சம் மீது படும்போது அதைத் தன் இமைகளால் ஒத்தி எடுப்பது...
அன்பு
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தந்தை அகத்தில் காட்டாவிட்டாலும் இருதயத்தை நிறைய வைப்பது...
அன்பு
நம் மழலை நடையில் கீழே விழாமல் தாத்தா பாட்டி அரணாக நிற்பது...
அன்பு
நம் ஒவ்வொரு அசைவையும் உலக அதிசயங்களில் ஒன்றாக பெற்றோர்கள் பார்ப்பது...
அன்பு
நாம் கற்கும் கலைகளில் கிடைக்கும் வெற்றியின் போது ஆசானின் பார்வைபடுவது...
அன்பு
நாம் தோழர்களுக்காக தோள்கொடுத்து தோழமை சொல்வது...
அன்பு
நாம் இருக்கும் இடத்தில் புன்னகையை பூத்து குலுங்க வைப்பது...
அன்பு
நம் மணவாழ்க்கையை வாழ்வியல் பாடமாக மாற்றுவது...
அன்பு
பெற்றோர்கள் முதுமையில் நம்மிடம் எதிர்பார்ப்பது...
அன்பு
விழிக்கும் இமைக்கும் இடைவெளி உண்டோ... நாவிற்கும் சொல்லிற்கும் இடைவெளி உண்டோ... அன்பிற்கும் அன்னைக்கு இடைவெளி உண்டோ...
அன்பு
உலகத்தில் இதுவரை அளவிட முடியாதது எங்கும் நிறைந்தது......
அன்பு அன்பு அன்பு