REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Anbukodi Krishna - India
Entry No:
51
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு❤️
என்னடா மாயம் செய்தாய்….
அன்பு என்ற வார்த்தையை நினைக்கும் போதெல்லாம்
உன்னையே என் மனம் காட்சிப்படுத்துகிறது.
உன் மார்போடு எனை அணைத்து,
உன் விரல் கொண்டு என் கூந்தல் கோதி,
உன் இதழ் முத்தம் என் நுதல் தீண்டும் போது உணர்கிறேன்
உடல் நலக்குறைவும் ஒரு வரமே…
நீ எனை கொஞ்சுவதும் இல்லை, கெஞ்சவதும் இல்லை,
எனை ஏனோ கொஞ்சமும், கெஞ்சவும், மிஞ்சவும் வைக்கிறாய்.
தாயன்பு தலைசிறந்தது, தந்தையின் பாசம் புனிதமானது.
உனது அன்பை எடுத்துச் சொல்ல வார்த்தையை தேடுகிறேன்
தேடல் முடிந்த பாடில்லை.
என்னடா மாயம் செய்தாய்….
உன்னுடைய ‘என்ன மா' என்ற ஒன்றை வார்த்தை
எனது கோபம், வேதனை, ஏக்கம் என அனைத்தையும் மறக்கச் செய்கிறது.
பலரிடம் பேசி சிரித்தாலும், உன் ஒற்றை புன்னகைக்கு ஈடில்லை.
பெண்ணடிமைக்கு எதிராக பேசியவளை
உன் அன்பால் கைது செய்தாய்.
பாசத்தால் சிறை அமைத்தாய்.
நேசத்தால் அடிமை செய்தாய்.
இன்று உன்னடிமையாய் ஆகிப் போனேன்.
என்னடா மாயம் செய்தாய்….
எனக்கே தெரியாமல் எனது மனம் உனக்கு தகவல் தருகிறதோ!?
நான் பேச நினைப்பதை உன் மனம் எப்படி அறிந்து கொள்கிறது?
உனது பார்வை எனது வலி நிவாரணி
உனது புன்னகை எனது ஹெல்த் டிரிங்க்
உனது அணைப்பு நான் பெறும் அங்கிகாரம்
நீ எனை உனது ராணியாக நடத்தும் போதெல்லாம்
உனக்கு சேவகியாய் ஆகிவிடுகிறது எனது மனம்.
உனது அன்பை எடுத்துச் சொல்ல வார்த்தையை தேடுகிறேன்
தேடல் முடிந்த பாடில்லை … … .. ..