REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Amirthavalli Sriram - India

Entry No: 

48

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அம்மா தரும் ஆசை முத்தம்,

அப்பாக்கள் காண்பிக்க தவறும் பாசம்,

சகோதரியுடன் களித்த குழந்தை பருவம்,

சகோதரன் ஜடை பிடித்து இழுக்கும் தருணம்,

எப்பொழுதும் எனக்காக காத்திருக்கும் தோழியின் தோள்கள்,

நம்மை சிரிக்க மட்டுமே வைக்கும் தோழனின் கேளிக்கைகள்,

அரவணைக்க துடிக்கும் கணவனின் கரங்கள்,

இவன் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனைவியின் கர்வம்,

குழந்தை முகம் காண ஏங்கும் கர்ப்பிணியின் துடிப்பு,

மென்மையான ஸ்பரிசத்தில் தந்தை இடும் முதல் முத்தம்...

காதலை பகிர்வோம்,
அனுபவித்து வாழ்வோம்...