top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Akash Juve - India
Entry No:
306
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல் ;
கத்தி சொல்ல முடியாமல்
கல்லி செடியில் எழுதும்
-சிறுபருவ காதல் !❤️
அவள் தின்ற மிட்டாய்
புத்தகத்திலும் மணக்க
மிட்டாய் பேப்பர் சேர்க்கும்
-பள்ளி பருவ காதல் !❤️
சொல்லிவிட்டால் தள்ளி
செல்வாளோ என்ற
அச்சத்தின் உச்சத்தில்
காதல் என்றே தெரியாமல்
காதலித்து கொள்கின்றனர்
-ஒருதலை காதல் !❤️
அவள் பார்த்தாலே காதலாம் ;
இரண்டே நாளில் கமிட்டடாம்;
ஒரே நாளில் ஒமிட்டடாம் ;
-2k's காதல் !❤️
காதலி இல்லை என்றாலும்
"இரவில் மட்டும் காதல் "
என்ற தலைப்பில் உணர்ச்சி
கட்டுரை வரைகின்றனர்
-தனிமையின் காதலர்கள்!❤️
bottom of page