top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Abishek .V - India

Entry No: 

515

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்

🔴நீ வரும் நேரம்வரை நான்
காத்திருக்க
என் பிம்பம் உன் மனதில்
எங்கும் படர்ந்திருக்க
நம் காதல் என்றும்
நிலைத்திருக்கும்....

🔴 ஆழகான மயிலின்
ஆகவலிலோ..
உன் விழியின்
பகலிலோ..
நான் என்னை தொலைப்பது
ஏன்னடி..

🔴 உன் காதல் என்னை
சீராட்ட...
உன் காமம் என்னை
கைதாக்க...
நான் என்றும் உன் வசமடி
பெண்ணே...

🔴 வானில் நாம் இருவருமே
மேகம்....
நாம் இருவரும்
மோதிக்கொண்டாதால்..
நமக்கு இடையே உண்டனது
காதல் மோகம்...

🔴பகலில் நீ என்
பகலோன்...
அந்தியில் நீ என்
அகலோன்...

🔴என் வாழ்வில் நீ என்னை.
வந்து அடைந்தாய்...
அதில் காதல் என்கின்ற
பக்கத்தை திறந்தாய்..
நீயே அதில் வரிகளாகயும்
மாறினாய்...

🔴 ராத்திரி நேரம் கண்கள்
சொக்குமடி...
எப்பொழுதும் உன்னிடம் என்
நெஞ்சம் சிக்குமடி..

🔴 கதிரவன் கதிர் வீசுவது
போல...
உன் கண்கள் என் மீது காதல்
வீசுவது போல் மாயம்
ஏனோ....!

🔴காற்றெங்கும் உன் வாசம்
வீச..
அதனுடன் என் சுவாசம்
பேச..
காற்றோடு காற்றாய் நான்
கரைய..
இறுதியில் உன்னை வந்து
நான் அடைய..

🔴 என் இதய ஓசையும்
உன் இதய ஓசையும்
சேர்ந்து ஒலிப்பது போல
கலக்கம் ஏனோ....!
இது தான் காதல்
என்பதோ........





bottom of page