REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Abinaya R - India
Entry No:
173
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அவள் நெற்றியில் குங்குமத்தோடு வழியும் வியர்வையும்... 😍😍
அள்ளிச் சொறுகப்பட்ட புடவையின் கொசுவ மடிப்போடு அவளது இடுப்பு மடிப்பும்... 🥰🥰
ஓரிடத்தில் நில்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் அவளது மை பூசப்பட்ட மருண்ட விழிகளும்... 😘😘
அசைவுக்கேற்ப நடனமாடும் அவளது காது ஜிமிக்கியும்... ❤❤
அவளது ஜிமிக்கிக்குத் தாளம் போடும் அவளது கைநிறைய கண்ணாடி வளையங்களும், கால் கொலுசும்... 💞 ஒற்றைக் கத்தல் கூந்தலை நொடிக்கொரு முறை கடத்தி ஒதுக்கி ஒளித்து வைக்கும் அவளது கைகளும்... 💗💖💕
ஓரிடத்தில் நில்லாது அவளது குறும்பிற்கே குறும்பு சேர்க்க துள்ளும் அவளது கால்களும்... 🥰🦶🏻
தாமரை போன்ற அவளது சிவந்த அதரங்களும்... 😍
சிந்தனை என்ற பேர்வழியில் அதனை கடித்து மேலும் சிவப்பேற்றும் அவளது அரிசி பற்களும்... 💕💋👄
எனது ஓர் விழிப்பார்வைக்கே தாங்காது வெட்கப்பட்டு ஓடும் என்னவள்... 🥰
ஏனோ காலங்கள் பல கடந்தும் இன்றளவும் என்னுள் அவளை நினைத்த மாத்திரத்தில் ஆழிப்பேரலையையே உருவாக்கி விடுகிறாள்... 🥰😮😮
ஏனோ அவளைக் காண, அவளைக் தலை முதல் கால் வரை இரசிக்க, அவளை அணுஅணுவாய்க் காதலிக்க, அவளின் முழுக் காதலைப் பெறவும் வரம் அளித்த எம்பெருமான் அவளைக்கைப்பிடிக்கும் வரத்தை மட்டும் வேறு யாருக்கோ வழங்கிய அவலத்தை எண்ணி இன்றளவும் கண்களில் பெருகுகிறது நீரூற்று... 🥺😢😭