REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
திவ்யா .ச - India
Entry No:
480
தமிழ் கதை (Tamil Kadhai)
தமிழ் கதை
"உதவி"
என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.அப்போது நான் பள்ளியில் ஏழாம் அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அன்று மாலை எம் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டங்கள் நடை பெறவிருந்தன.ஆதாலால் வீட்டிற்கு தாமதமாகத்தான் செல்ல வேண்டியிருந்தது.வீட்டில் எமக்காக ஏற்பாடு செய்ய பட்டிருந்த வண்டியும் காத்திருக்ககாது.பேருந்தில் தான் செல்ல வேண்டும்.இவைகளை அறியாத நான் என் வகுப்பில் எதோ வொன்றிற்காக பணம் வாங்கிக் கொண்டிருந்தனர், எதற்காக என்று இப்போது நினைவுக்கு வரவில்லை.எனினும் குடுத்தது நினைவில் உள்ளது.ஏனென்றால் அன்று என் தோழிக்கும் நான் தான் குடுத்தேன்.அடுத்து வரப்போகும் சம்பவங்களை அறியாத நான் மிகவும் மகிழ்ச்சியாக அப்பொழுதை கழித்தேன்.என் பள்ளியில் இருந்து சுமார் பதிமூன்று கிலோமீட்டர்.பேருந்திற்கு பணம் இல்லை என்பது என்னை உறுத்த ஆரம்பித்திருந்தது.எனினும் "பஸ் பாஸ்"வைத்திருந்தேன்.பள்ளி முடிந்து பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.சுமார் மாலை ஏழு மணிக்கு ஒரு பேருந்து வந்தது.என் நண்பர்கள், ஊர் அண்ணன்கள் ஏறியதால் நானும் ஏறினேன்.எனினும் எங்கள் ஊரில் நிறுத்தாது.இரண்டு ஊர்கள் தள்ளி தான் நிற்கும்.எனக்கு வேறு வழியில்லாமல் ஏறினேன்.நடத்துனர் எங்கள் ஊர்" பாஸ் செல்லாது" என்று கூறியது கேட்டவுடன் எனக்கு ஒன்றும் புரியாமல் போனது.என்னிடம் பணமில்லை என்று தெரிந்ததும் திட்டினார்.பேருந்தில் இருப்பவர்களின் கண்களும் என்னைத்தான் பார்த்தது.அழத் தொடங்கினேன்.அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.உண்மையில் தாயானவள் எந்த குழந்தையின் துன்பத்தையும் தாங்க மாட்டாள்.அதற்கு சாட்சி நானே.நான் அந்நிலையில் இருந்த போதிலும் எனக்கு உதவி செய்தது ஒரு தாய் தான்.அவர் குடுத்த இருபது ரூபாய் நோட்டை நான் நடத்துனருக்கு நீட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது.நன்றியை நான் இப்போது இங்கு பதிவிடுகிறேன்.அதிலிருந்து
பேருந்தில் பணம் இல்லாமல் செல்வதில்லை.
நான் உதவி செய்தது எனக்கு திருப்பி கிடைத்தது என்றார் என் பாட்டி.
முன்பின் அறியாதவர்கள் வேதனையில் இருக்கும் போது அதை வேடிக்கை பார்ப்பவர்களின் பக்கம் இருந்த என்னை இச்சம்பவம் மாற்றியது.
நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்,அது சிறிதாய் இருப்பினும் அடுத்தவர்களின் நினைவில் இருப்பீர்கள்.
அவர்களின் வாழ்வையும் மாற்றலாம், என்னை போல் சிந்தனையையும் மாற்றலாம்.
உதவி சங்கிலி தொடரட்டும்.நன்றி