REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
தமிழரசு கா - India
Entry No:
82
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இரு(ள்) வாழ்க்கை வாழ்கிறாள்
அவர்களுக்கு இடையில்
அற்புதமான ஓர் உறவு…
அவனோ காதல் கண்ணன்….
அவளோ கட்டி இழுக்கும் நிலா…
அன்பின் உச்சத்தில் இரு மனங்கள்!
ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்தாலும்
அதற்காக வருந்தியது இல்லை…!
அதிகமான அக்கறையில் அவன்
அக்கறையே இல்லாமல் அவள் …!
அதனாலேயே அடிக்கடி சண்டைகள்..!
ஆனாலும் விட்டு கொடுக்காத உறவு..
இவளோ ,
கற்பனையாக அவனை
கட்டி அணைத்தாலும்
கருவில் இருந்த
உணர்வில் ஆடுகிறாள்!
அவனோ,
“இதழும் இதழும் இனையும்
இன்பத்திற்கு ஈடில்லை”
என்று கவி பாடுகிறான்.. !
அப்படி இருக்கையில்
அதிர்ச்சி அலை ஏற்பட்டது!
அன்பாக எப்போதும் பேசுபவன்
அலைபேசி எடுக்கவில்லை..!
புரியாமல் புலனம் பார்த்தால்
புலனத்திலோ பேர் அதிர்ச்சி...!
அவன் அனுப்பிய கடைசி பதிவு…
“என்னவளே அழுகாதே
என் உயிர் பிரியப் போகிறது…!!
கடைசியாகக் கூட காண முடியாது..
காரணம் கொரோனாவால் இரு(ற)க்கிறேன்..!
காதல் கவிதை எழுத நினைத்தவன்
கடைசி கவிதை எழுதுகிறேன்..!
இது வரை சிறு பிள்ளையாக இருந்தாய்
இனிமேல் ஆவது சிந்தித்து இரு!
முடிந்த வரை முயற்சி செய்
முடிந்தால் ஏதேனும் சாதனை செய்!
எல்லோரையும் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்
இதுவே என் கடைசி ஆசை….!”
இதை படித்ததும் பதறுகிறாள் ….
கண்ணீர் கசிய கதவடைத்து கிடக்கிறாள் …
காலம் செல்ல செல்ல
காதலன் ஆசை படியே
பகலிலோ.. மற்றவரின் மகிழ்ச்சிக்காக
இரவிலோ.. மரண சோகத்திலும்
இரு(ள்) வாழ்க்கை வாழ்கிறாள்… !