REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
கோபிநாத் மணிகண்டன் - India
Entry No:
74
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
இயற்கைதனை சுமந்த இளங்கன்னியின் பேரில் இக்கவி துவக்கம்
கார்மேகம் அது எனைச்சூழ காதல் மோகமது தாலாட்ட !!
கொட்டும் மழைதனிலே சொட்ட சொட்ட நனைந்தாயே ...
சிந்தும் மழை துளியில் சிட்டுக்குருவியென உலர்ந்தாயே!!
எட்டி நின்று நான் பார்க்க என்னவளே எட்டு எடுத்து வைத்தாயே
எண்ணமெல்லாம் ஏக்கம்
கொள்ளுதடி....
உன் நினைவு சாரல்தனை என்னுதடி!!
வான்திறந்த மேகமாய் மழை கொட்டுதடி உன் வாய் திறந்த வார்த்தையாய் என்னை கொல்லுதடி!...
அந்த மின்னலும் சற்று இடைவெளி விட்டு நிற்கவுமாம் என்னவளே உன்விழிப்பார்வைக்க முன்னால்.......
ஆண்டுகள் பல கழிந்தாலும் உன் நினைவேனோ அழியவில்லை எந்நெஞ்சில்...
அழிய அது காகிதத்தில் எழுதிய ஓவியம் அல்ல கல்லில் செதுக்கிய சிற்பமன்றோ -ஆம் சிற்பந்தான் உளியால் பல வலி தாங்கி நின் பார்வையால் கருவமேற்று சற்று அழகே தோற்று கொள்ளும் காதல் என் காதல் அன்றோ!!......
சித்தம் யாவும் கலங்கினதே நித்தம் உனை நினைக்கையிலே
கண்மணியே....
பித்தம் பிடித்து போனதடி என்னுள் மொத்தம் அள்ளி போகயிலே!!..
இயற்கையும் நீயும் ஒன்றல்லவோ இயன்றதை கூறும் இளைய கவி நானல்லவோ!!
சில்லென்ற காற்றினிலே மேனிசிலிர்க்க அழகிய நின் சிறுதுளியிலே அகம் குளிர இயற்கையின் கொண்டாட்டமென மரங்கள் எல்லாம் ஆட்டம் போட
சாரல் என தூவும் நின் சிறுதுளியும் சவாலாய் அமைந்ததென்ன ரசிக்க குடை ஏதும் வேண்டாம் எனைக்காண நன்கொடை ஏதும் வேண்டாம் என இறுதியில் ஏழு வண்ண பட்டுடுத்தி வளைந்தழகாய் நிற்கிறாய் எவர் நெய்தனரோ இப்பேரழகை...
பேரழகு கொண்ட பெண்ணே நின் மாரழகு கூற வார்த்தை ஏது
உன்னழகு கண்டேன்
தன்னழகு கொண்டேன்
பின்னழகு கண்டேன் பிரமித்து போனேன் -நின்
சொல்லழகு தனையே செவியது கேட்க காதில் அமுதழகு என கேட்டதேனோ?...அழகின் ஊற்றே அழகிய பூவே
எனை எடுத்து சூட்டு தானாய் வருமொரு புதுப்பாட்டு
காண துடித்த கண்களுக்கு விருந்து அளிப்பது எப்போது?..
விருந்தாக அளித்தல் வருத்தமாயினும் அதை நீயே
தந்தால் என்செய்வேன் மானே!!
தென்றலுக்கு பூவோடு காதல் தேனீக்களுக்கு தேனோடு காதல்!!
மஞ்சத்தில் மங்கையுடன் காதல்
மலர் மாலைக்கு கழுத்தோடு காதல்
நாருக்கு பூவோடு காதல் நாற்றுக்கு சேற்றோடு காதல் அலைக்கு கரை மீது காதல்
என் அன்னைக்கு என்னோடு காதல்
மழைக்கு மண் மீது காதல் மண்ணுக்கு மனித உடல் மீது காதல்
எனக்கு உன் மீது காதல் அன்புக்கு அன்னை மீது காதல் அறிவுக்கு தந்தை மீது காதல் பரிவுக்கு அண்ணன் மீது காதல்
பாசத்திற்கு தங்கை மீது காதல்
காதல் காதல் காதல்
பிறந்ததும் அதனாலே நாம் இருந்தும் தொடருதே எதனாலே
எதிலும் காதல் எதில் இல்லை காதல் அனைத்தும் காதல் அகிலமும் காதல்
காதல் இல்லையே கவியும் இல்லை சுவாசக் காற்றும் இல்லை!!
காதலுக்காக
கவிஞர் கோபிநாத்