GOLU AROUND THE GLOBE

Take a peek at Vijayalakshmi Sailapathi's golu from India (+91)

Golu Photo 3

# Votes:

0

Tell us about your Golu

Energy எனப்படும் சக்தி... பெண் வடிவம் என்பது நம் பாரத பாரம்பரியம். ஆதலால் விஞ்ஞான பூர்வமாக ஆண் வடிவம் என்பது matter என்ற உயிர்ப்பற்ற வஸ்துகள்தான். பெண் வடிவ சக்தியை போற்றும் நவராத்திரி திருநாளில் அமைக்கப்பட்டுள்ள எங்கள் வீட்டு கொலு2020யின் மையக் கருத்து ஸ்ரீ மஹாத்மியம். 9 படிகள் கொண்ட பிரதான கொலுவின் முதல் படியிலேயே ஆண்/பெண் சக்திக்கு ஆதாரமான ஸ்ரீ லக்ஷ்மி மையமாகவும்... ஆண் தெய்வ வடிவங்கள் அதன் ஓரங்களில் என்பதாக முத்தாய்ப்பாக கருத்தை பதிந்துள்ளோம். மண், மரம், உலோகம், அலோகம் என்று பலதரப்பட்ட ஆண் வஸ்துக்கள் உயிர்ப்புடன் பொம்மைகளாக சங்கமமாகும் கொலுவின் உயிர் சக்தி பெண்மை போற்றும் ஸ்ரீ மஹாத்மியம் அன்றி வேறல்ல. ஆண் பெண் கலப்பில்தான் ஸ்ரீசக்தி மற்றும் வஸ்து பயன் தரும் உயிர்ப்பு. இதனை பிரதிபலிப்பதாகத்தான் கடவுளர்களின் ஆண் - பெண் சங்கம வடிவங்களில் அமைந்துள்ளது எங்கள் இரண்டாவது படி . நம் பூமாதேவிதான் உயிர் சக்திக்கு ஆதாரம். சிவனே என்று இருக்காமல் ஆண் தெய்வ வடிவங்கள் பூமிக்கு சக்தியின் அருளுக்காக இறங்கி வந்து அவதாரங்களாக உயிர்ப்புடன் செயல்பட்டதுதன் தொகுப்புதான் மூன்றாவது படி. பூமியின் தெய்வ மற்றும் இதர உயிர்களின் செயல்பாடுகளை சரியான உயிரின அடுக்காக பிரதிபலிக்கிறது 5 முதல் 9 நிலையில் முறையாக அமைக்கப்பட்டுள்ள தெய்வ வாழ்வு, தெய்வீக மஹான்களின் வரலாறு, நவீன மனித வாழ்வு, பண்டை மனித வாழ்வு மற்றும் விலங்கு/தாவர வாழ்வு கருத்துக்கள். இவை அனைத்திற்கும் ஆதாரமான ஸ்ரீசகக்திதான் மையமான 4 படியில் கலசமாக வழிபாட்டுக்கு தயாராக அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள பூமிக்கு சூரியனால் சக்தியா அல்லது பால்வழியில் மிதக்கும் சூரிய குடும்பத்திற்கு அதன் மைய கருந்துளை சக்தியா என்று விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் சக்தியை ஆராய்ந்து கொண்டிருந்தாலும்... சக்தி இருப்பது உயிர்ப்புடனான மூச்சு சாத்தியமாகும் நம் பூமியில் என்பதுதானே மெய்ஞானம். உயிர்ப்பு சாத்தியமில்லாத சக்தி பயனற்றது. பூமியில் ஸ்ரீசக்தி தேவி வடிவ வழிபாடு என்று மட்டுமல்லாமல் ஆண் வடிவ சூரிய சக்தி வழிபாடும் ஸ்ரீமஹாத்மியம்தான். சூரிய சந்திர வம்ச அவதாரக் கதைகளாகும் இராமாயணம் மற்றும் மஹா பாரத கொலு அமைப்பு என்று மட்டுமல்லாமல் சக்தியின் திருக்குமாரர்களின் திருவிளையாடல்களும் ஸ்ரீமஹாத்மியமாக காட்சிப்படுத்தப்பட்டுகொலுவில்... அறுபடை முருகன் என்றும் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார் என்றும் ... ஸ்ரீ சக்தியின் லீலைகள்தான் காட்சியாக கொலுவில் என்றாலும் அவளுக்கென்றும் பல வடிவங்கள் மற்றும் அவதாரங்கள். விஞ்ஞானம் இன்று சூரிய சக்தியை உணர்ந்ததோடல்லாமல் புவி ஈர்ப்பு சக்தி, நீர் மின்சார சக்தி, புனல் மின்சார சக்தி... என்று பல வடிவங்கள் கண்டறிந்துள்ளது. நம் பாரம்பரிய மெய்ஞானத்தின் அஷ்டமா சக்திகளில் நவீன பணமும் ஸ்ரீசக்தியின் வடிவம்தான்! அவ்வாறான ஸ்ரீசக்தியின் மெய்ப்பாடு வடிவங்களையும் அவதார வடிவங்களையும் ஸ்ரீ மஹாத்மிய கொலு தனியாகவே காட்சிப்படுத்தியுள்ளது.

சக்திக்கு ஆக்கமும் அழிவும் இல்லை என்று விஞ்ஞானம் மெய்ப்பித்தாலும்... சக்தியின் சங்கமத்தில் வரும் ஸ்ரீசக்தியான உயிர்ப்பு அழிவதுதான் நிதர்சனம். சக்தியற்று உயிர்ப்பு நீங்கி புதையுண்ட நாகரீகங்கள், மறைந்து போன விலங்கினங்கள் Jurassic Park மற்றும் மஹாபலிபுரமாககாட்சியாகிறது ஸ்ரீமஹாத்மிய கொலுவில். மொத்தத்தில் ஸ்ரீமஹாத்மியம் ... இது பல யுகங்கள் கடந்து மனிதம் காணும் ஸ்ரீமஹாத்மியம் என்பதற்கான இந்த வருட
நோபல் விஞ்ஞான நிரூபணமும் கொலுவில். இது உங்களை நீங்களே உணர்ந்து செயல்படுத்த தூண்டும் கொலு.Energy எனப்படும் சக்தி... பெண் வடிவம் என்பது நம் பாரத பாரம்பரியம். ஆதலால் விஞ்ஞான பூர்வமாக ஆண் வடிவம் என்பது matter என்ற உயிர்ப்பற்ற வஸ்துகள்தான். பெண் வடிவ சக்தியை போற்றும் நவராத்திரி திருநாளில் அமைக்கப்பட்டுள்ள எங்கள் வீட்டு கொலு2020யின் மையக் கருத்து ஸ்ரீ மஹாத்மியம். 9 படிகள் கொண்ட பிரதான கொலுவின் முதல் படியிலேயே ஆண்/பெண் சக்திக்கு ஆதாரமான ஸ்ரீ லக்ஷ்மி மையமாகவும்... ஆண் தெய்வ வடிவங்கள் அதன் ஓரங்களில் என்பதாக முத்தாய்ப்பாக கருத்தை பதிந்துள்ளோம். மண், மரம், உலோகம், அலோகம் என்று பலதரப்பட்ட ஆண் வஸ்துக்கள் உயிர்ப்புடன் பொம்மைகளாக சங்கமமாகும் கொலுவின் உயிர் சக்தி பெண்மை போற்றும் ஸ்ரீ மஹாத்மியம் அன்றி வேறல்ல. ஆண் பெண் கலப்பில்தான் ஸ்ரீசக்தி மற்றும் வஸ்து பயன் தரும் உயிர்ப்பு. இதனை பிரதிபலிப்பதாகத்தான் கடவுளர்களின் ஆண் - பெண் சங்கம வடிவங்களில் அமைந்துள்ளது எங்கள் இரண்டாவது படி . நம் பூமாதேவிதான் உயிர் சக்திக்கு ஆதாரம். சிவனே என்று இருக்காமல் ஆண் தெய்வ வடிவங்கள் பூமிக்கு சக்தியின் அருளுக்காக இறங்கி வந்து அவதாரங்களாக உயிர்ப்புடன் செயல்பட்டதுதன் தொகுப்புதான் மூன்றாவது படி. பூமியின் தெய்வ மற்றும் இதர உயிர்களின் செயல்பாடுகளை சரியான உயிரின அடுக்காக பிரதிபலிக்கிறது 5 முதல் 9 நிலையில் முறையாக அமைக்கப்பட்டுள்ள தெய்வ வாழ்வு, தெய்வீக மஹான்களின் வரலாறு, நவீன மனித வாழ்வு, பண்டை மனித வாழ்வு மற்றும் விலங்கு/தாவர வாழ்வு கருத்துக்கள். இவை அனைத்திற்கும் ஆதாரமான ஸ்ரீசகக்திதான் மையமான 4 படியில் கலசமாக வழிபாட்டுக்கு தயாராக அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள பூமிக்கு சூரியனால் சக்தியா அல்லது பால்வழியில் மிதக்கும் சூரிய குடும்பத்திற்கு அதன் மைய கருந்துளை சக்தியா என்று விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் சக்தியை ஆராய்ந்து கொண்டிருந்தாலும்... சக்தி இருப்பது உயிர்ப்புடனான மூச்சு சாத்தியமாகும் நம் பூமியில் என்பதுதானே மெய்ஞானம். உயிர்ப்பு சாத்தியமில்லாத சக்தி பயனற்றது. பூமியில் ஸ்ரீசக்தி தேவி வடிவ வழிபாடு என்று மட்டுமல்லாமல் ஆண் வடிவ சூரிய சக்தி வழிபாடும் ஸ்ரீமஹாத்மியம்தான். சூரிய சந்திர வம்ச அவதாரக் கதைகளாகும் இராமாயணம் மற்றும் மஹா பாரத கொலு அமைப்பு என்று மட்டுமல்லாமல் சக்தியின் திருக்குமாரர்களின் திருவிளையாடல்களும் ஸ்ரீமஹாத்மியமாக காட்சிப்படுத்தப்பட்டுகொலுவில்... அறுபடை முருகன் என்றும் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார் என்றும் ... ஸ்ரீ சக்தியின் லீலைகள்தான் காட்சியாக கொலுவில் என்றாலும் அவளுக்கென்றும் பல வடிவங்கள் மற்றும் அவதாரங்கள். விஞ்ஞானம் இன்று சூரிய சக்தியை உணர்ந்ததோடல்லாமல் புவி ஈர்ப்பு சக்தி, நீர் மின்சார சக்தி, புனல் மின்சார சக்தி... என்று பல வடிவங்கள் கண்டறிந்துள்ளது. நம் பாரம்பரிய மெய்ஞானத்தின் அஷ்டமா சக்திகளில் நவீன பணமும் ஸ்ரீசக்தியின் வடிவம்தான்! அவ்வாறான ஸ்ரீசக்தியின் மெய்ப்பாடு வடிவங்களையும் அவதார வடிவங்களையும் ஸ்ரீ மஹாத்மிய கொலு தனியாகவே காட்சிப்படுத்தியுள்ளது.

சக்திக்கு ஆக்கமும் அழிவும் இல்லை என்று விஞ்ஞானம் மெய்ப்பித்தாலும்... சக்தியின் சங்கமத்தில் வரும் ஸ்ரீசக்தியான உயிர்ப்பு அழிவதுதான் நிதர்சனம். சக்தியற்று உயிர்ப்பு நீங்கி புதையுண்ட நாகரீகங்கள், மறைந்து போன விலங்கினங்கள் Jurassic Park மற்றும் மஹாபலிபுரமாககாட்சியாகிறது ஸ்ரீமஹாத்மிய கொலுவில். மொத்தத்தில் ஸ்ரீமஹாத்மியம் ... இது பல யுகங்கள் கடந்து மனிதம் காணும் ஸ்ரீமஹாத்மியம் என்பதற்கான இந்த வருட
நோபல் விஞ்ஞான நிரூபணமும் கொலுவில். இது உங்களை நீங்களே உணர்ந்து செயல்படுத்த தூண்டும் கொலு.

Share your Video link if you have any
Golu Photo 3
Golu Photo 3