GOLU AROUND THE GLOBE
Take a peek at Radhika Muralidharan's golu from India (+91)
# Votes:
54
Tell us about your Golu
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.
என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். விவசாயத்தை பாதுக்காக்க வேண்டும் இல்லையேல் பஞ்சம் வருவது தவிர்க்க இயலாததாகி விடும். விவசாயத்தைப் பாதுக்காக்க விவசாயியை பாதுக்காக வேண்டும். என்ற கருத்துக்கள் சிந்தனைக்குரியவை.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 🙏
இதை நினைவு கூறும் வகையில் வயல், வரப்பு, விவசாயிகள்,பம்பு செட், ஓலை குடிசை, கிராமத்தின் காவல் தெய்வம் ,புற்று மேடை, பஞ்சாயத்து தலைவர், மாட்டு தொழுவம்,மின்கம்பங்கள் என்று எங்கள் கொலுவைஅமைத்துள்ளோம்.